2020 புத்தாண்டு ராசி பலன்கள்: கடக ராசிக்காரர்களே! தேடிவரும் வெளிநாடு யோகத்தால் அடிக்கும் அதிர்ஷ்டம் !

0

2020 புத்தாண்டு ராசி பலன்கள்: கடக ராசிக்காரர்களே! தேடிவரும் வெளிநாடு யோகத்தால் அடிக்கும் அதிர்ஷ்டம்

2020ஆம் ஆண்டில் நமக்கு புதிய நல்ல வேலை கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம். சில ராசிக்காரர்களோ, திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா இந்த ஆண்டாவது திருமணம் முடியுமா என்றும் யோசிப்பார்கள். அதே போல இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். கடகம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ரிஷபத்திற்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களை தரப்போகிறது. 2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு சனி திருக்கணிதப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார்.

குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதிசாரமாக மகரத்திற்கு சென்று சில மாதம் சஞ்சரிக்கிறார். பின்னர் தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்திற்கு இடம்பெயர்கிறார். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராகு பகவான் மிதுனம் ராசியிலிருந்து கால புருஷனுக்கு இரண்டாவது ராசியான நில ராசி மற்றும் சுக்கிரனின் ராசியில் பெயர்ச்சி அடையும் காலம் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் பெருகும். கேது பகவான் கால புருஷனுக்கு 8வது ராசியான விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடையும் காலம் திடீர் அரசியல் மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் மந்த நிலை மறையும். சரி இனி கடகம் ராசிக்கு 2020ஆம் ஆண்டில் கிடைக்கப் போகும் யோகங்களைப் பார்க்கலாம்.

முன்னேற்றம் தரும் மாற்றம்
புத்தாண்டு கடகம் ராசிக்கு சனி ஏழாம் வீடு குரு ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கின்றன. களத்திர ஸ்தானத்தில் சனி, ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு. தொழில் பார்ட்னர் தொழில் ஸ்தானத்திற்கு தொழில் ஸ்தானத்தில் சனி அமர்கிறார். சனி ஆட்சி பெற்று அமரும் காலத்தில் செவ்வாய் இணையும் போது சவால்கள் அதிகம் இருக்கும். செய்யும் தொழிலில் ரொம்ப வேலை செய்ய வேண்டிருக்கும். ரொம்ப அசால்டா இருக்காதீங்க. புதிய தொழில் மாற்றங்கள் பண்ணலாம். பயணங்கள் நல்லவிதமாக வெற்றிகரமாக அமையும். திருமண வாழ்க்கையில் திடீர் தடைகள் ஏற்படும் பின்னர் சுபமாக முடியும்.

தொழில் முன்னேற்றம்
எதிர்பார்த்த நிறுவனத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். லாபமும் கிடைக்கும். காரணம் சனி ஏழாம் வீட்டிலும் குரு ஆறாம் வீட்டில் அமர்ந்து இரண்டாம் வீட்டையும் பார்ப்பது சிறப்பு. சுய தொழில் தொடங்குபவர்களுக்கு லாபம் கிடைக்கும். குரு 6ல் இருந்து உங்க தொழில் ஸ்தானமான 10ஆம் இடத்தைப் பார்ப்பதால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் எதிர்பார்க்கும் சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். எதற்கும் எச்சரிக்கையாகவே இருங்கள்.

படிப்பில் கவனம்
மாணவர்களுக்கு இந்த ஆண்டு கொஞ்சம் கவனமாக இருங்க காரணம் ஆறாம் வீட்டில் குரு அமர்ந்திருக்கிறார். போட்டிகளை உருவாக்குவார் படிப்பில் ஆர்வத்தை கொடுப்பார். 5ல் குரு இருந்து பல நல்ல பலன்களைக் கொடுத்து இருந்தாலும், தற்சமயம் 6ஆம் இடத்தில் மறையப் போகின்றார். 6ல் இருந்து 12ம் இடமான விரய ஸ்தானத்தை பார்க்கின்றார். இதனால் படிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும், சோம்பேறித்தனம் வரும். அதிகாலையில எழுந்து படிங்க. கவனமாக படித்தால் நிறைய மதிப்பெண் வாங்கலாம்.

ஆரோக்கியத்தில் அக்கறை
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. கடந்த சில வருஷங்களாகவே ரொம்ப ஜாலியாக உற்சாகமாக இருந்தீங்க. இந்த வருஷம் வயிறு பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். சாப்பாட்டு விசயத்தில கவனமாக இருங்க நேரத்திற்கு சாப்பிடுங்க. உங்களின் வாக்குவன்மை அதிகரிக்கும். புதிய உறவுகள் தேடிவரும். உறவினர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து, விட்டுக் கொடுத்து செல்லுங்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

வெளிநாடு வாய்ப்பு
2020ஆம் ஆண்டில் நல்ல யோகங்கள் கிடைக்கப் போகிறது. குருவினால் விபரீத ராஜயோகம் கிடைக்கப் போகிறது. வங்கியில கடன் கிடைக்கும். வீடு கட்ட வண்டி வாகனம் வாங்க லோன் வாங்குவீங்க. குடும்ப ஸ்தானத்தை குருபகவான் பார்க்கிறார் பிரிவினைகள் தீரும் காலம் வந்து விட்டது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவி உறவில் அந்நியோன்னியம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த உரசல்கள் தீரும். வெளிநாடு வாய்ப்பு தேடி வரும்.

யோகமான ஆண்டு
2020 நல்ல வருஷம்தான் என்றாலும் சவால்களை எதிர்கொள்ளும் வருஷமாக அமையும். போட்டி பந்தையங்களில் வெற்றிகள் கிடைக்கும். இத்தனை ஆண்டுகாலம் சனிபகவான் உங்களுக்கு யோகங்களை கொடுத்து வந்தார். இனி நிறைய சவால்களை சந்திக்க வேண்டும். ஏழுக்குடைய சனி ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். வெள்ளிக்கிழமை முருகப்பெருமானை வழிபட நன்மைகள் நடக்கும். கவலைகள் தீர கந்தர் சஷ்டி கவசம் படிங்க. சனிக்கிழமைகளில் தன்வந்திரி பீடத்தில் எழுந்தருள் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவார ராசி பலன் நவம்பர் 24 முதல் 30 வரை !
Next articleபுத்தாண்டு ராசிபலன் 2020 மிதுன ராசிக்காரங்களே! வெற்றிகரமான ஆண்டில் அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்