2020 புத்தாண்டு பலன்கன் சீறி பாயும் சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம் !

0
1488

2020 புத்தாண்டு பலன்கன் சீறி பாயும் சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்

2020 ஆம் ஆண்டில் நமக்கு புதிய நல்ல வேலை கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம். சில ராசிக்காரர்களோ, திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா இந்த ஆண்டாவது திருமணம் முடியுமா என்றும் யோசிப்பார்கள். அதே போல இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். சிம்மம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு ராஜயோகத்தோடு லாபம் தரும் ஆண்டாக அமைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ரிஷபத்திற்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களை தரப்போகிறது. 2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு சனி திருக்கணிதப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார்.

குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதிசாரமாக மகரத்திற்கு சென்று சில மாதம் சஞ்சரிக்கிறார். பின்னர் தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்திற்கு இடம்பெயர்கிறார். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராகு பகவான் மிதுனம் ராசியிலிருந்து கால புருஷனுக்கு இரண்டாவது ராசியான நில ராசி மற்றும் சுக்கிரனின் ராசியில் பெயர்ச்சி அடையும் காலம் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் பெருகும். கேது பகவான் கால புருஷனுக்கு 8வது ராசியான விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடையும் காலம் திடீர் அரசியல் மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் மந்த நிலை மறையும். சரி இனி கடகம் ராசிக்கு 2020ஆம் ஆண்டில் கிடைக்கப் போகும் யோகங்களைப் பார்க்கலாம்.

ராஜயோக ஆண்டு
ஐந்தாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் சனி. ராஜா சிம்மத்திற்கு அதிபதி சூரியன், சனி எப்பவுமே எதிர்ப்பாகத்தான் இருப்பார். ஆறுக்கு அதிபனாக சனி அமர்வதால் நன்மையை தருவார். விபரீத ராஜயோகம். உங்க எனர்ஜி லெவல் அற்புதமாக போயிரும். குரு சனி இணைவு அற்புதமாக இருக்கும். குரு அதிசாரமாக போகும் காலங்களில் சுமாராகவே இருக்கும்.

வேலையில் புரமோசன்
சிம்மராசிக்கு மிகச்சிறந்த ஆண்டு. உங்க ராசிக்கு பஞ்சம ஸ்தானம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம் ரொம்ப வலிமையாக இருக்கிறது. பூர்வ புண்ணியம் அற்புதமாக இருக்கிறது. சனி, கேது, புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து உங்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறார்.

சனி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். கடந்த பல காலங்களாக பட்ட கஷ்டம் தீரப்போகிறது. அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். இதுநாள்வரை தடைபட்டு வந்த புரமோசன் கை கூடி வரப்போகிறது. பதவியோடு புகழும் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு உயர்பதவிகள் தேடி வரும்.

மனைவி உடல் நலனில் அக்கறை
இதுநாள் வரை திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். திருமணம் நடைபெறும் காலம், திருமணம் நடைபெற்று குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். மனைவி உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். நோய்கள் வந்தாலும் உடனடியாக தீரும்.

முதலீட்டில் லாபம்
மாணவர்களுக்கு இது அற்புதமான ஆண்டு. உயர்கல்வி படிக்கும் யோகம் வரும். உயர்கல்வி படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான ஆண்டு நன்றாக படித்து வேலை கிடைக்கும். உங்க லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் தொழிலில் நல்ல லாபங்கள் வரலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் பங்கு சந்தை முதலீடுகள் அற்புதமான லாபத்தை கொடுக்கும்.

சந்தோஷம் தரும் ஆண்டு
இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். ஊர்மாற்றம் ஏற்படும் காரணம் சிம்ம ராசியின் மீது குருவின் பார்வை விழுகிறது. குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உங்க பொருளாதார நிலை உயரும். குடும்பத்திலும் சந்தோஷம் அதிகரிக்கும். உங்க வாழ்க்கை நிலை உயரப்போகிறது.

Previous articlesandakaari vadi vadi songs lyrics kadaikutty singam movie !
Next articleஇந்த 5 ராசிகளில் யாரை திருமணம் செய்தாலும் இந்த உலகில் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி !