2020 இல் எந்த எண் காரர்களுக்கு சனி பகவான் அள்ளிக்கொடுக்கவிருக்கிரார்? யாரை இந்த சக்தி வாய்ந்த சனி ஆட்டிப்படைக்கும்!

0

2020 இல் எந்த எண் காரர்களுக்கு சனி பகவான் அள்ளிக்கொடுக்கவிருக்கிரார்? யாரை இந்த சக்தி வாய்ந்த சனி ஆட்டிப்படைக்கும்!

ஒன்று தொடக்கம் ஒன்பது வரையிலான எண்காரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவர்கள். இவ்வாறாக கோள்களுடைய தனித்தன்மைக்கு அமைவாக‌ அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், செயற்பாடுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம். ஒருவருடைய‌ பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையை அவருடைய அதிர்ஷ்ட எண்ணாக‌ கண்டறியப்படுகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு கிரகங்களுடைய‌ சஞ்சாரமானது அற்புதமாக உள்ளது. முக்கிய கிரகங்கள் ஆட்சி பெற்று அமர்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். அந்த வகையில் ஒவ்வொரு எண்ணுக்கும் எப்படியான பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கை முறை இந்த வருடம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சூரியன் ஆதிக்கமான‌ எண் 1ல் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. சூரியன் ஆதிக்கம் கொண்ட இந்த எண்ணிற்கு 2020 நன்மைகளையே செய்யும். முதியவர்களுக்கு உடல் ஆரோக்கியம் கிட்டும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் பொருட் சேர்க்கை உண்டாகும். தொழிலில் மேன்மை கிடைக்கும்.

சந்திரன் ஆதிக்கமான‌ எண் 2ல் பிறந்தவர்களுக்கு 2020ம் ஆண்டு திருமண யோகம் கைகூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும். கல்வியில் மானவர்கள் சிறந்து விள‌ங்குவர். கூத்தனூர் சென்று சரஸ்வதியை தரிசனம் செய்து விட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

குருவின் ஆதிக்கமான எண் 3ல் பிறந்தவ‌ர்களுக்கு 2020ம் ஆண்டு சற்றே சோதனைகள் நிறைந்த ஆண்டாகத்தான் இருக்கும். ஆஞ்சநேயரை தரிசனம் செய்வது சிறப்பு. சோதனைகளை சாதனையாக்க தெரிந்தவர்கள் நீங்கள் மனம் தளராமல் இருங்கள். பயணங்களின் போது சற்று கவனமாக இருக்கவும் பயணம் செல்லும் போது விநாயகரை வணங்கி விட்டு செல்லுங்கள். திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள்.

ராகுவின் ஆதிக்கமான 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த‌ 2020ம் ஆண்டானது செழிப்பான ஆண்டாக அமையும். பல வழிகளில் வருமானங்கள் வரும். உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும், உழைப்பு அதிகமாகும். இந்த ஆண்டு சுபமான காரியங்களில் முதலீடு செய்வது நல்லது சொத்துக்கள், வீடு, மனை என்பன‌ வாங்கலாம்.

புதனின் ஆதிக்கமான 5 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த‌ 2020ம் ஆண்டானது அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமையும். சுப விரையங்கள் ஏற்பட்டாலும் குபேரன் அருள் கிடைக்கும். புதன்கிழமைகளில் திருவெண்காடு சென்று வணங்கி வருவது சிறந்தது.

சுக்கிரன் ஆதிக்கமான 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த‌ 2020ம் ஆண்டானது எப்படி அமையப்போகுறது என்றால் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல விமோசனம் கிடைக்கும். வெளி நாட்டு வேலை வாப்பு தேடுவோருக்கு வெளிநாடுகளில் நல்ல வேலை கிடைக்கும்.

கேதுவின் ஆதிக்கம் நிறைந்த 7 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டு பல‌ சோதனைகளை கொடுத்தாலும் உங்களின் திறமையால் அதனை சாதனைகளாக மாற்றலாம். திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். கேதுவின் நாயகன் சித்திரகுப்தனை வணங்குவதால் வருடம் முழுவதும் சாதனைகள் படைக்கலாம். மனம் தளராமல் உங்களின் மேல் நம்பிக்கை வையுங்கள்.

சனியின் ஆதிக்கம் நிறைந்த எண் 8ல் பிறந்தவர்களுக்கு சனியின் பார்வையால் 2020ஆம் ஆண்டு நன்மைகள் தீமைகள் இரண்டும் கலந்த ஆண்டாக அமையும். எட்டாம் எண் சக்தி வாய்ந்த எண் எனவே இந்த எண் காரர்களுக்கு சனியும் ராகுவும் இணைவதால் பல மாற்றங்கள் வாழ்வில் ஏற்படும்.

செவ்வாய் ஆதிக்கமான‌ 9 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டு பொற்காலமான ஆண்டாக அமைந்துள்ளது. நிறைய வெற்றிகள் கிடைக்கும். வெற்றியை நோக்கி செல்வார்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கும், காவல்துறை, தீயணைப்புத்துறை, ராணுவத்துறையில் இருப்பவர்களுக்கு மகத்தான ஆண்டாக அமையும் . கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நிறைய வெற்றிகள் தேடி வரும். பதவி உயர்வு வரும். பெண்களுக்கு சக்தி நிறைந்த ஆண்டு.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 30.12.2019 ! இன்றைய பஞ்சாங்கம்!
Next articlesani peyarchi 2020 to 2023 சனி பெயர்ச்சி 2020-2023 மற்றும் குரு பெயர்ச்சி பலன்கள் 2020 தொடக்கம் 2023 வரை மேஷ ராசிக்கு எப்படி அமையப் போகிறது !