2019 இல் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்தது இவர்கள் தான்! நம்ம ரகுமான் என்ன ஆனார்!

0
563

91 ஆண்டை நிறைவு செய்கிறது ஆஸ்கர் விருதுகள் விழா. ஆம் 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விழா மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த விருது விழாவில் புதிதாகக் கலந்து கொள்ளுவதற்கு இது புதிய மேடையாகக் கூட இருந்திருக்கும்.

நிறைய நாமினேட் செய்யப்பட்ட திரைப்படக் குழுவினருக்கு இந்த மேடை பல அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் வழங்கக் காத்திருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மட்டுமின்றி யாருக்கு விருது கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த நமக்கும் நிறைய ஆச்சர்யங்களும் மகிழ்ச்சியும் கிடைத்தது. சரி. அப்படி இந்த 2019 ஆண்டு எந்தெந்த படங்களுக்கு, எந்தெ இயக்குநருக்கு சிறந்த இயக்குநர் விருது ஆகியவை கிடைத்திருக்கின்றன என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.

சிறந்த திரைப்படம்
இந்த 2019 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம் கிரீன் புக் (green book) என்னும் திரைப்படம். இந்த திரைப்படத்துக்கு சிறந்த திரைப்படம் என்ற விருது மட்டுமல்ல, மொத்தம் மூன்று விருதுகள் இந்த படத்துக்காகக் கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் டான்ஷிர்லி என்னும் என்னும் பியானோ இசைக் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய படம் தான் அந்த கிரீன் புக்.

சிறந்த இயக்குநர்
2019 ஆண்டுக்கான சிறந்த இயக்குநராக ஆஸ்கர் பரிசை வெற்றி பெற்றிருப்பவர் ROMA என்னும் திரைப்படத்தின் இயக்குநரான அல்போன்சா கியூரன் என்பவர் தான் இந்த விருதைத் தட்டிச் சென்றிருக்கிறார்.

போட்டா போட்டி
கிரீன் புக் திரைப்படம் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றிருந்தாலும் கூட, அதற்கு நிகராகப் போட்டி போட்ட திரைப்படங்களைப் பற்றியும் பார்க்க வேண்டும் அல்லவா? அப்படி இரண்டு படங்கள் மிகத் தீவிரமான போட்டி போட்டன. போகிமேன் ரப்சடி என்னும் திரைப்படமும் A STAR IS BORN என்னும் திரைப்படமும் தான் போட்டிக் களத்தில் கடைசிவரை தொடர்ந்து வந்தன.

பர்ஸ்ட் மேன்
பர்ஸ்ட் மேன் என்னும் திரைப்படம் தான் சிறந்த விசுவல் எஃபக்ட் (best visual effect) க்கான விருதைத் தட்டிச் சென்றிருக்கிறது.

சிறந்த ஆவணக் குறும்படம்
ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதைத் தட்டிச் செல்பவர் யார் தெரியுமா? பீரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ் (Period. End Of Season) என்னும் குறும்படத்துக்குத் தான் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது.

சிறந்த ஆடை மற்றும் சிறந்த தயாரிப்பு
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக சிறந்த ஆடை மற்றும் சிற்நத தயாரிப்பாளர் ஆகிய விருதுகளை இந்த வருடம் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க பங்கேற்பாளர்கள் தட்டிச் சென்றிருக்கிறார்கள்.

வெளிநாட்டு திரைப்படம்
ரோமா (ROMA) என்னும் திரைப்படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. இது ஒரு மெக்சிகன் திரைப்படம். அதுமட்டுமல்லாது ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே முதன் முறையாக மெக்சிகன் திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் பங்கு பெற்று விருதைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பிற
முக்கிய விருதுகளைப் பற்றி பார்த்தோம். அதைத் தொடர்ந்து இன்னும் என்னென்ன தேர்வுகளில் என்னென்ன படங்கள் மற்றும் யார் யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்னும் முழு விவரப் பட்டியலையும் பற்றிப் பார்ப்போம்.

Documentary (fearture) – Jimmy Chin and Elizabath Chai Vasarhelyi, FREE SOLO

Actress in a Supporting Role – Regina King, If Beale Street Could Talk

Makeup and Hairstyling – Greg Cannom, Kate Biscoe, and Patricia Dehaney, Vice

Costume Design – Ruth E. Carter, Black Panther

Production Design – Hannah Beachler and Jay Hart, Black Panther

Cinematography – Alfonso Cuarón, Roma

Sound Editing – John Warhurst, Bohemian Rhapsody

Sound Mixing – Paul Massey, Tim Cavagin, and John Casali, Bohemian Rhapsody

Foreign Language Film – Alfonso Cuarón, Roma Film Editing – John Ottman, Bohemian Rhapsody

Actor in a Supporting Role – Mahershala Ali, Green Book

Animated Feature Film – Spider-Man: Into the Spider-Verse, Bob Persichetti, Peter Ramsey, Rodney Rothman

Animated Short Film – Domee Shi, Bao Documentary

Short Subject – Rayka Zehtabchi and Melissa Berton, Period. End of Sentence.

Visual Effects – Paul Lambert, Ian Hunter, Tristan Myles and J.D. Schwalm, First Man

Live Action Short Film – Guy Nattiv and Jamie Ray Newman, Skin

Best Original Screenplay – Nick Vallelonga, Brian Currie, Peter Farrelly, Green Book

Best Adapted Screenplay – Spike Lee, Sean McKittrick, Jason Blum, Raymond Mansfield, Jordan Peele, BlacKkKlansman

Original Score – Ludwig Goransson, Black Panther

Original Song – Lady Gaga, Mark Ronson, Anthony Rossomando, and Andrew Wyatt, “Shallow,” A Star Is Born

Best Actor in a Leading Role – Rami Malek, Bohemian Rhapsody

Best Actress in a Leading Role – Olivia Colman, The Favourite Best Director – Alfonso Cuarón, Roma Best Picture – Green Book

ஏ.ஆர். ரகுமான்
2009 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் முதல் முறையாக தன்னுடைய பிரமாண்டமான இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்து கொடுத்தவர் தான் நம்முடைய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்ஃ அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டு ஆஸ்கர் விருது விழா நெருங்குகின்ற போதும் நமக்கு இந்தியாவுக்கு இந்த ஆண்டு விருதுகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் இந்த வருடமும் ரகுமானின் எந்த திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷனுக்குச் செல்லவில்லை. விருதும் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. ரகுமான் மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை குறைக்காமல் ஆதரவு கொடுத்துக் கொண்டே இருப்போம். மறுபடியும் ஆஸ்கர் விருதைப் பெற முயற்சி செய்வோம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: