2019 ஆம் ஆண்டுக்கான கேது பெயர்ச்சி எப்போது வருகிறது? அது எந்தெந்த ராசிகளை பாதிக்கும்?

0

2019 ஆம் ஆண்டுக்கான கேது பெயர்ச்சி எப்போது வருகிறது? அது எந்தெந்த ராசிகளை பாதிக்கும்?

இந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெறும் கேது பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலன்களை அள்ளி தரப் போகிறது? வாங்க பார்க்கலாம் எல்லாரும் சந்தோஷமாக எதிர் நோக்கி காத்திருந்த புது வருடம் பிறந்தாச்சு.

இந்த வருடமும் நன்றாக சந்தோஷமாக அமைய வேண்டும் என்பது எல்லாருடைய ஆசையாக வும் எதிர்பார்ப்பாகவும் இருக்கும். அதன் படி இந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெறும் கேது பெயர்ச்சி நமக்கு நன்மைகளை அளிக்குமா? என்பதை பற்றி ஜோதிட வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கே காணலாம்.

கேது ராகுவுக்கு எதிர்மறையாக அமைந்திருக்கும் கிரகமாகும். இந்த கேது கிரக நிலை ஒருவரின் கடந்த கால செயல்களை நிர்ணயிக்க கூடியது. அதே மாதிரி இவர் உங்களுக்கு பொருள் வசதிகளையும் கொடுத்து மகிழ்ச்சியையும் அள்ளிக் கொடுக்க கூடியவர். ராகு மற்றும் கேது திசை ஒவ்வொரு ராசியிலும் 18 மாதங்கள் இருக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டின் மார்ச் 7 ஆம் தேதி கேது தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி அங்கிருந்து விருச்சிக ராசியை அடைகிறார். இந்த இடைப்பட்ட கால இடப்பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கும் ஏராளமான நன்மைகளையும் அதே நேரத்தில் தீமைகளையும் கொடுக்கக் போகிறது. கேது இடப்பெயர்ச்சி யில் அணுகூலான பயன்களைப் பெற விநாயகரையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டு வாருங்கள். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மேஷம்
இந்த கேது இடப்பெயர்ச்சி மேஷ ராசி அன்பர்களுக்கு நிதி, பரிவர்த்தனைகள், முதலீடுகள் மற்றும் செலவு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. எந்த காரியத்தை செய்யும் போதும் வெற்றியை நோக்கி நகர்த்தும் விதத்தில் திட்டங்களை வகுத்து கொள்ளுங்கள். நன்கு யோசித்து ஆராய்ந்த பிறகே அனைத்து முடிவுகளையும் எடுக்க முற்படுங்கள். குடும்பத்தில் தொந்தரவுகள் ஏற்படக் கூடும். தந்தையுடன் எதாவது கருத்து வேறுபாடு தோன்றலாம். உடல் நிலை மோசமடையக் கூடும். தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வரும் கஷ்டங்களை போக்க கருப்பு எள்ளை தானமாக கொடுங்கள்

ரிஷபம்
இந்த இடப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மோசமான நிலை என்றே கூறலாம். வாகன ஓட்டும் போது கவனமாக இருங்கள். வரவு குறைவாகவும் செலவு அதிகமாகவும் இருக்கும் கால கட்டம் இது. மற்றவர்களின் கெட்ட செயல்களால் கஷ்டத்தை அனுபவிக்க கூடும். ஆன்மீக ரீதியில் முழுவதுமாக உங்களை ஈடுபடுத்தும் போது குடும்ப தொந்தரவுகள் ஏற்படக் கூடும். நண்பர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய செயல்திறன், நிலைப்புத்தன்மை மற்றும் மன அமைதி எல்லாம் காணாமல் போகும். எள் எண்ணெய்யை தானமாக கொடுங்கள். கேதுவின் அணுகூலன்கள் கிட்டும்

மிதுனம்
உங்கள் துணையுடனான உறவில் சில பின்னடைவுகளையும் தொந்தரவுகளையும் சந்திக்க நேரிடும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பாதுகாப்பாக நகர்ந்து விடுவது நல்லது. மனைவியுடான உங்கள் உறவில் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். உறவுகளுடான பிரச்சினைகள் அதிகமாகாமல் பார்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால் பிரிவுக்கு வழி வகுத்து விடும். தொழில் களில் பாதிப்பு ஏற்படக் கூடும். கூட்டாளிகளுடன் சில வேறுபாடுகள் மனக் கசப்புகள் ஏற்படலாம். தொழில் சார்ந்த பிரச்சினைகள், நெருக்கடி சூழ்நிலைகள் இருக்கும். அருகம்புல்லை கணபதிக்கு படைத்து வழிபட்டு வாருங்கள் நன்மை கிட்டும்.

கடகம்
இந்த இடப்பெயர்ச்சி நிறைய செலவுகளை தரக் கூடியது. பணத்தை சேமிக்க இது சரியான கால கட்டம் கிடையாது. பணியிடங்களில் சில பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும். எனவே உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் சில பாதிப்புகள் உண்டாகும். அனுமான் வழிபாடு கஷ்டங்களை போக்கி மனதிற்கு அமைதியை தரும்.

சிம்மம்
இந்த காலக்கட்டத்தில் கடுமையான பணப் பிரச்சினையை சந்திக்க நேரிடும். கண்மூடித்தனமாக மக்களை நம்புவது உங்களுக்கு பணயிழப்பை ஏற்படுத்தும். முதலீடுகள் மற்றும் சொத்து தொடர்பான முடிவுகளுக்கு இது சரியான நேரம் கிடையாது. வேலையோடு ஒடி கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் படிப்பில் சில கஷ்டங்களை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கை வாதங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் துணையிடம் கடுமையான வாக்கு வாதங்களை தவிர்க்கவும். குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்படலாம். கருப்பு பொடியை பைரவ கோயிலில் வைத்து வழிபட்டு வாருங்கள் நன்மைகள் கூடும்.

கன்னி
இந்த இடப்பெயர்ச்சி மாற்றம் உங்களுக்கு நிதி நெருக்கடியை கொண்டு வரக் கூடும். வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நிலவும். இதனால் குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் நிலவும். மகிழ்ச்சியான குடும்ப சூழலுக்கு இது ஏற்ற காலம் அல்ல. அதிகமான பணி அழுத்தம் மன அழுத்தத்தையும் மற்றும் உடல் சோர்வுக்கும் வழி வகுக்கும். இதனால் மன அழுத்தம், டென்ஷன் மற்றும் கவலைகள் மேலோங்கும். உங்கள் தாயின் நலனில் அக்கறை செலுத்தவும். நீல நிற மலர்களைக் கொண்டு கடவுளை வழிபட்டு வாருங்கள்.

துலாம்
இந்த கேது இடப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழலை கொடுக்கப் போகிறது. வேலை பார்க்கும் நபர்கள் குறுகிய காலத்திலேயே வேலையிடங்களில் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். இந்த நம்பிக்கை உங்களுக்கு நிறைய நன்மைகளை தரும் உங்களுடைய பேச்சு திறனே மற்றவர்களை எளிதாக ஈர்த்து விடும். உங்களுடைய நல்ல நடத்தை மற்றும் நட்பான உள்ளம் நிறைய நண்பர்களையும் புதிய உறவுகளையும் பெற்றுத் தரும். தற்போதைய வேலையில் ஒரு பதவி உயர்வு இருக்கலாம். பொருளாதாரம் திருப்தி அளிக்க கூடியதாக இருக்கும். மற்றவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு நம்பிக்கையையும் வெற்றியையும் பெற்றுத் தரும்.

விருச்சிகம்
இந்த இடப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்க போவதில்லை. பண வரவில் சரிவு ஏற்படும். பணத்தை கடனாக பெறுவதை தவிருங்கள். கடுமையான வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுகள் குடும்பத்திலும் அலுவலகத்திலும் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் பிரிவு ஏற்படும். செலவுகளில் தீடீர் அதிகரிப்பு ஏற்படும். உடல் சார்ந்த பாதிப்பு அசெளகரியத்தையும் பண பாதிப்பையும் ஏற்படுத்தும். நீல நிற பூக்களை கொண்டு கடவுளை வணங்குங்கள்.

தனுசு
உங்களை சுற்றி இருப்பவர்களால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். திருமண வாழ்க்கை கடுமையாக பாதிப்படையும். இது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே பிரிவை கூட ஏற்படுத்தலாம். நிதி நிலையிலும் திருப்திகரமான முடிவு கிடைக்காது. நாள்பட்ட பாதிப்புக்கு சிகச்சை செலவழிக்க நேரிடும். மகா மிருத்யுன்ஜெயா மந்திரத்தை ஓதுங்கள். நடப்பது நன்மையாக அமையும்.

மகரம்
இந்த மாற்றம் உங்களுக்கு துன்பங்களை கொடுக்க கூடிய காலகட்டம். பண இழப்பு, தேவையில்லாத செலவு போன்றவை ஏற்படும். பணியிடங்களில் நிறைய தடைகள் மற்றும் தொந்தரவுகள் புதிய ஏற்படும். எனவே புதிய தொழிலுக்கு நகர்ந்து கொள்ள சரியான நேரம். உடல் நல பாதிப்பு ஏற்படும். குழந்தைகளுக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படும். முடியாதவர்களுக்கு போர்வையை தானமாக கொடுக்கலாம்.

கும்பம்
இது உங்களுக்கு சாதகமான நேரம் என்றே கூறலாம். தொழில் மற்றும் வாழ்க்கையில் வெற்றி அடைய கூடும். சமூகத்துடனான பழக்கம் நிறைய நண்பர்களையும் மனிதர்களையும் பெற்று தரும். உங்களுடைய வேலையில் கவனத்தை செலுத்துவது நல்லது. உயர் வகுப்பு சேர்க்கைக்கு செல்லும் மாணவர்கள் இடம் கிடைப்பதில் சற்று சங்கடத்தை அனுபவிப்பீர்கள். பண ஆதாயத்திற்கு சரியான நேரம். லெஹ்சூனியா ரத்தினத்தை அணிந்து கொள்ளுங்கள். நன்மைகள் தேடி வரும்

மீனம்
இந்த கேது இடப்பெயர்ச்சி பணத்தை சேமிக்க நல்ல வழிகளை காண்பிக்கும். அதிக வேலை அழுத்தத்தால் குடும்பத்துடன் நேரம் கழிக்க முடியாமல் போகும். அதிக வேலைப்பளு, அனுபவங்களால் பணியிடங்களில் விரக்தி நிலை ஏற்படும். மற்றபடி உழைக்கும் ஆசாமிகளுக்கு இது நல்ல நேரம். தொழில் செய்பவர்களுக்கு நல்லநேரம். நிறைய லாபத்தை பெற இயலும். தாயின் உடல் நலத்தில் அக்கறை வேண்டும். முடிந்தால் உங்கள் தாயுடன் நேரம் ஒதுக்குங்கள் மற்றும் அவர்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். எள் எண்ணெய்யை தானமாக கொடுங்கள். கேதுவின் பார்வை உங்களுக்கு அணுகூலன்களை கொடுக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெக்ஸ் குறித்த உங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 05.01.2019 சனிக்கிழமை!