2 ஆண்டாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்கள்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

0
727

உத்திர பிரதேச மாநிலம் சிதாபூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவியை அவரது உறவினர்களும், ஆசிரியரும் கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச பள்ளி மாணவி ஒருவர் நன்றாக படித்து வந்தார். இது பிடிக்காமல் அவரது உறவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவர்கள் ஆசிரியருடன் கூட்டு சேர்ந்து அந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பள்ளி வளாகத்திலேயே மாணவிகளை அவர் பலமுறை கற்பழித்து இருக்கிறார்.

அந்த மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி இந்த படுபாதக செயல்களை செய்து வந்தனர். பாதிக்கப்பட்ட அந்த மாணவி இது குறித்து போலீசிடம் முறையிட்டபோது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே மாணவி பற்றிய வீடியோ வெளியானதால் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

போலீஸ் விசாரணையில் மாணவியுடன் அந்த பள்ளியில் படிக்கும் உறவினரான சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ஆசிரியர், மாணவியின் உறவினர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.

மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசைக்கோ கணவரை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த மீரா மிதுன்! கண்ணீருடன் பிக்பாஸ் போட்டியாளர்கள்!
Next articleதிருமண நாளன்றே மணமேடையில் மப்பில் தள்ளாடிய மாப்பிள்ளை! அதிர்ந்துபோன பெண் வீட்டார்கள் செய்த செயல்!