19 வருடங்களின் பின் தாயகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!வெளிநாட்டில் இலங்கையர்கள் செய்த பெருந்தவறு!

0
252

வெளிநாடு ஒன்றில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர்களை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

19 வருடங்களுக்கு முன்னர் கொரிய நாட்டில் இடம்பெற்ற துஷ்பிரயோகம் தொடர்பில் இலங்கை சந்தேக நபர்கள் மூவரை தேடும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டில் கொரியாவின் தேகு பிரதேசத்தில் 18 வயதான இளம் பெண் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த நாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு பின்னர் 2012ஆம் ஆண்டு கொரியாவில் பணிக்கு சென்ற இலங்கையர்கள் , அங்கு வேறு பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்கு குற்றவாளியாகியுள்ளனர். நீதிமன்றத்தில் குற்றவாளியாகிய அவர்களின் DNA மாதிரிகள் பெறப்பட்டு சேமிக்கப்பட்டன.

2011ஆம் ஆண்டு அந்த அதிகரிகளினால் பெற்றுக் கொள்ளப்பட்ட DNA மாதிரி மற்றும் 19 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட பெண்ணின் ஆடையில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட DNA மாதிரியுடன் பொருந்தியுள்ளது.

அதன் பின்னர் உயிரிழந்த பெண்ணின் தந்தை இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். எனினும் வழக்கிற்கு 10 வருட தாமதம் என்பதனால் நீதிமன்றம் வழக்கினை நிராகரித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ள நிலையில், தற்போது, அந்த பெண்ணின் உறவினர்கள் மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கை காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு சம்பவம் தொடர்பில் பதில் கூற நேரிட்டுள்ளது.

இலங்கை குடிமகன் ஒருவர் இலங்கைக்கு வெளியே மேற்கொள்ளும் குற்றம் தொடல்பில் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளமையினால் தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் இவ்வாறான விசாரணை ஒன்றை கோட்டை நீதிமன்றம் விசாரிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: