நடிகர் – நடிகைகளின் வாரிசுகள் பெரும்பாலும் தன்னுடைய தந்தை மற்றும், தாய் செய்யும் வேலையால் ஈர்க்கப்பட்டு அவர்களும் நடிகையாகும் சூழல் ஏற்படுகிறது. படித்து முடித்து குறிப்பிட்ட வயதை தாண்டி பின் தான் பிரபலங்களின் வாரிசுகள் நடிப்பதா, அல்லது ஏதேனும் தொழில் தொடங்குவதா என்பதை பற்றி சிந்திப்பார்கள்.
ஆனால் நடிகை குஷ்புவின் மகள் 16 வயதிலேயே தொழிலதிபராக மாறியுள்ளார். இவரின் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் இவருக்கு பலர் சமூக வலைத்தளம் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
குஷ்பு மகள்
இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் மகளுமான 16 வயது ஆகும் அனந்திட்டா, தன்னுடைய நண்பர் ஜைனா ஃபாஸல் என்பவருடன் இணைந்து இணையதளத்தில், அழகு சாதன பொருட்கள், கீரிம், உள்ளிட்டவை விற்பனை செய்யும் சமூக வலைத்தளத்தை துவங்கியுள்ளார். மேலும் “ANMOL ” என்று அதற்க்கு பிராண்ட் பெயர் வைத்துள்ளார்.
இதற்க்கு நடிகை குஷ்பு தன்னுடைய மகளுக்கு வாழ்த்து தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “அவள் எங்கள் பெருமை’… ‘எங்கள் குழந்தை’ அவள் தற்போது சிறகு விரித்து பறக்க துவங்கிவிட்டால் என கூறி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவந்திட்டா துவங்கியுள்ள இந்த புது தொழில் வெற்றி பெற பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.