Home Jaffna News 14 வயதில் கனடா விமான நிலையத்தில் வந்திறங்கிய ஈழத் தமிழனின் உரைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!

14 வயதில் கனடா விமான நிலையத்தில் வந்திறங்கிய ஈழத் தமிழனின் உரைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!

0
476

ஒன்டாரியோ மாகாணம் உட்பட கனடாவின் நலன்களுக்காக பாடுபடுவேன் என ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஈழத்தமிழ் இளைஞரான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

மாகாண நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது கன்னி உரையின் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்தின் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழன். என்னை மாகாண நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய உதவி, தொண்டர்கள், அரசியல்வாதிகள் உட்பட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பதாக ஸ்காப்ரோ தொகுதி மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது எனது முதலானது கன்னி உரை. மாகாணத்தின் நலன்களுக்காக புதிய சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகள் காரணமாக நாங்கள் அங்கிருந்து வெளியேறி தென்இந்தியாவில் தஞ்சமடைந்தோம். இதன் பின்னர் சட்டபூர்வமாக கனடாவில் குடியேறினோம்.

14 வயதில் நான் கனடா விமான நிலையத்தில் வந்திறங்கினேன். எனது குடும்பத்தினரின் ஆதரவுடன் ஸ்காப்லோவில் பாடசாலை கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வியை முடித்தேன்.

ஒன்டாரியோ மாகாணம் உட்பட கனடாவின் நலன்களுக்காக பாடுபடுவேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய கனடாவுக்கும் ஒன்டாரியோ மாகாணத்திற்கும் எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி என்னால் முடிந்ததை செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

Previous articleவெளியான உண்மை தகவல்! வினோதமாக பிறந்த பன்றி முக குழந்தை!
Next articleஇறுதியில் வசமாக சிக்கிய சம்பவம்! நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடிய நபர்!