14 வயது மாணவியை பல முறை சீரழித்த 17 வயது மாணவன்! கர்ப்பமானதால் அதிர்ச்சியைடந்த பெற்றோர்!

0
620

தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள அரசு பள்ளியில் மஞ்சுளா என்ற மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி நேற்று வழக்கம் போல பள்ளிக்கு செல்லும் போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்..

இதையடுத்து ஆசிரியர்கள் மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த தகவல் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

அதில் தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் குமார் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பல முறை கற்பழித்தது தெரியவந்தது. இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

இதுகுறித்து பள்ளி மாணவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் ஐடிஐ மாணவர் குமார் மீது போக்சோ சட்டத்தின கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதற்கொலை செய்துகொள்ளலாம் போல இருக்கிறது! பிக்பாஸ் மீரா மிதுனின் அம்மா அதிர்ச்சி பேட்டி!
Next articleஎன் மனதை கொள்ளையடித்துவிட்டார் லாஸ்லியா! ஹரிஷ் கல்யாண் போட்ட ரொமான்டிக் ட்விட்! வைரலான காட்சி!