14 வயது மகனை எரித்துக் கொன்ற தாயார்! நடந்தது என்ன!

0
840

கேரளாவில் 14 வயது மகனை எரித்தே கொன்ற தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் கணவரின் வாக்குமூலத்தில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரளாவில் சொந்த மகனையே கொடூரமான முறையில் கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னர் உடலை நெருப்பு வைத்து எரித்து மறைவு செய்த வழக்கில் கைதான ஜெயாமோள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமது பிள்ளைகளிடம் எப்போதுமே வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வந்ததாக கூறும் ஜோப் ஜான்,

அவரை எவரும் கிண்டலடிக்க அனுமதித்தது இல்லை எனவும், அவரது குணம் அறிந்தே தாம் ஒருபோதும் வாக்குவாதத்தில் அவருடன் ஈடுபட்டது இல்லை எனவும் ஜான் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக எந்த குறையும் இல்லாத நிலையிலும், ஜெயாமோள் அடிக்கடி எதிர்காலம் குறித்தும் பணம் இல்லாது எவ்வாறு வாழப்போகிறோம் எனவும் கவலைப்பட்டு வந்துள்ளார்.

மட்டுமின்றி, இதுவரை நாம் சேமித்த மொத்த செல்வத்தையும் தங்களது மகளின் திருமணத்திற்கு செலவு செய்தால் அதன் பின்னர் நாம் எவ்வாறு பிழைத்துக் கொள்வது எனவும் அவர் கேள்வி கேட்டு வந்துள்ளார்.

இருப்பினும், அதிக பொன்னும் பொருளுடன் தமது மகளை திருமணம் செய்து அனுப்ப வேண்டும் எனவும் அவர் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

மேலும், தமது குணத்தால், தங்களது குடும்பத்தினர் எந்த சொத்தையும் தமக்கு தரவில்லை என அடிக்கடி அவர் கவலைப் பட்டும் வந்துள்ளார்.

இதை கொல்லப்பட்ட ஜித்து அடிக்கடி தமது தாயாரிடம் கூறி கிண்டலடித்தும் வந்துள்ளான். இதனால் ஜித்துவிடம் ஜெயாமோளுக்கு கோபம் இருந்து வந்துள்ளது. ஆனாலும் அவர் ஜித்துவிடம் பாசமாகவே இருந்து வந்துள்ளார்.

கோபத்தின் காரணமாகவே தாம் இந்த கொலையை செய்துள்ளதாக கூறும் ஜெயாமோள், அந்த ஒரு நொடியில் தாம் என்ன செய்தோம் என்பதை நினைவுக்கு கொண்டுவரவே முடியவில்லை எனவும் தமது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

ஜெயாமோள் விவகாரத்தில் பொலிசார் இதுவரை மனநலம் பாதிப்பு என்ற கோணத்தில் விசாரணையை துவக்கவில்லை எனவும், ஆனால் உளவியல் ரீதியாக பரிசோதனைக்கு ஜெயாமோளை உட்படுத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் ஜித்து கொல்லப்பட்ட விவகாரம் தங்களால் இதுவரை நம்ப முடியவில்லை எனவும், அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை எனவும் ஜெயாமோள் மற்றும் ஜோப் ஜான் ஆகியோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: