12 ராசிக்கும் சனி மற்றும் குருவால் 2022 புதிய வருடம் எப்படி இருக்கப் போகின்றது மகிழ்ச்சியின் உச்சம் தொட்டும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!
உங்களுக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் 2022 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
உங்களுக்கு நிதியைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்த ராசிக்காரர்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஆண்டின் தொடக்கத்தில் சனி மற்றும் புதனின் சேர்க்கையால் மார்ச் மாதம் வரை சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
ரிஷபம்
பிறக்கும் ஆண்டில் தொழில் சிறப்பாக இருக்கும். சனி பத்தாம் வீட்டில் இருப்பதால், பல வருமான ஆதாரங்கள் உருவாகும். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் பல கிரக பெயர்ச்சிகளால், செல்வமும், பணமும் குவியும்.
இருப்பினும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் உங்கள் நிதி நிலைமைகளில் பல ஏற்ற தாழ்வுகள் காணப்படும்.
மிதுனம்
2022 ஆம் ஆண்டு நிதி இழப்பு மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் சவால்களை சந்திக்க நேரிடும். சொல்லப்போனால் இது இந்த ராசிக்காரர்களுக்கு சோதனை காலமாக இருக்கும்.
வெற்றிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கடகம்
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் 7 ஆவது வீட்டில் இருப்பதால், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.ஏப்ரல் மாதத்தில் பல கிரக பெயர்ச்சிகள் பெறுகின்றன. எனவே ஏப்ரல் இறுதியில் இருந்து ஜூலை நடுப்பகுதி வரை உங்களின் நிதி நிலையில் பெரிதும் பாதிக்கப்படும்.
மேஷத்தில் ராகுவின் பெயர்ச்சியானது, பல வேலை வாய்ப்புக்களைத் தரும். இது செப்டம்பர் வரை நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும். ஜூன்-ஜூலைக்கு இடையில், செவ்வாய் மேஷத்தில் நுழைவதால், திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.
சிம்மம்
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் 5 ஆம் வீட்டில் இருப்பதால், நிதி நிலைமைகள் மேம்படும். ஏப்ரல் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும்.
ஏப்ரல் 12 ஆம் தேதி மேஷத்திற்கு ராகு செல்வதால், சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே இக்காலத்தில் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துங்கள். ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் வரை ரிஷப ராசியில் செவ்வாய் இருப்பது அதிர்ஷ்டத்தை வழங்கும்.
கன்னி
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெரும் செல்வத்தையும், நிதி செழிப்பையும் பெறுவார்கள். இருந்தாலும், உடல்நிலை பாதிக்கப்படலாம்.
ஏப்ரல்-இறுதியில் இருந்து ஜூலை நடுப்பகுதி வரை, சனி உங்கள் ஆறாவது வீட்டில் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். துலாம் ராசிக்கு புதன் செல்வதால், அக்டோபர் மாதத்தில் இருந்து நவம்பர் நடுப்பகுதி வரை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான உறவு வலுவடையும்.
துலாம்
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துலாம் ராசிக்காரர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.
ஜனவரி நடுப்பகுதியில் தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சாதகமான நிதி முடிவுகள் மற்றும் லாபம் உண்டாகும். மார்ச் மாதத்தில் பல கிரகங்களின் சேர்க்கையால் பொருளாதார வெற்றியும், சீரான பண வரவும் உண்டாகும். திருமணமாகாதவர்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.
விருச்சிகம்
2022 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் ஏப்ரல் வரை தேவையற்ற செலவுகள் இருக்கும். ஏப்ரல் மாத இறுதியில் சனி கும்ப ராசியில் பெயர்ச்சியாவதால், தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றில் கலவையான முடிவுகளைத் தரும்.
ஆக்ஸ்ட் முதல் அக்டோபர் வரை உங்கள் தாய் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நிதியைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் நிதி நிலைமை வலுபெறும்.
ஆண்டின் தொக்கத்தில் தனுசு ராசிக்கு செவ்வாய் செல்வதால், மனக் கவலைகள் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டு, குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.சூரியன் மகர ராசியில் சனியுடன் இணைந்திருப்பதால், பிரச்சனைகள் மற்றும் தவறான புரிதல்களை ஏற்படுத்தும். உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
மகரம்
நிதியைப் பொறுத்தவரை, செவ்வாய் 12 ஆவது வீட்டில் இருப்பதால், பணம் குவிப்பதில் தடைகள் ஏற்படலாம். வணிகர்களுக்கு, செப்டம்பர் முதல் ஆண்டு இறுதி வரை பயனுள்ள காலமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் சனி கும்ப ராசிக்கு செல்வதால், ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிக ராசியில் கேது இருப்பது, ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டாக்கும். சிறிய விஷயங்களுக்கு எல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் ஆகஸ்ட் முதல் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கும்பம்
2022 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஆரோக்கியம் சராசரியாக இருக்கும். நீங்கள் ஜனவரி மாதத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம்.
ஏப்ரல் மாதத்தில் உங்கள் உடன் பிறந்தவர்கள் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜனவரி மாதத்தில் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால், வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் வெற்றி கிட்டும். இருப்பினும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை உயர் அதிகாரிகளுடன் சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மீனம்
2022 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ஆண்டின் பெரும்பகுதியில் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் சனி பெயர்ச்சியால் புதிய வருமானம் கிட்டும். ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே கிரக நிலைகள் மாறிக் கொண்டே இருப்பதால், வாழ்க்கையில் பல நிதி ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள்.
2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சிறிய விஷயங்களுக்கு வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்