Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan 12.09.2018 இன்றைய ராசிப்பலன் ஆவணி 27, புதன்கிழமை!

12.09.2018 இன்றைய ராசிப்பலன் ஆவணி 27, புதன்கிழமை!

0
858

இன்றைய பஞ்சாங்கம்
12-09-2018, ஆவணி 27, புதன்கிழமை, திரிதியை திதி மாலை 04.07 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 01.07 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. கௌரி விரதம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

ரிஷபம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பணப்பிரச்சனைகள் குறையும்.

கடகம்
இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்
இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி
இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும்.

துலாம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் அடையலாம். சிக்கனமாக இருப்பதன் மூலம் பண நெருக்கடிகள் குறையும்.

விருச்சிகம்
இன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக கிடைக்கும்.

தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். லாபம் பெருகும். பொருளாதாரம் மேலோங்கும்.

மகரம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். எதிலும் நிதானம் தேவை.

கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 1.31 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும்.

மீனம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 1.31 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

Previous articleகுருபெயர்ச்சி பலன்கள் 2018 – 2019: தனுசு ராசியினரே நீங்கள் இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
Next articleவடக்கு மாகாணத்தின் முக்கிய மாவட்டத்தில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு!