Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசிப்பலன்!

12.08.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசிப்பலன்!

0
1328

12.08.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசிப்பலன்!

இன்றைய பஞ்சாங்கம்
12-08-2018, ஆடி 27, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பகல் 11.54 வரை பின்பு வளர்பிறை துதியை. மகம் நட்சத்திரம் இரவு 09.26 வரை பின்பு பூரம். மரணயோகம் இரவு 09.26 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகள் வாழ்வில் புதிய மாற்றங்களை உண்டாகும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும்.

மிதுனம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும்.

கடகம்
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

தனுசு
இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். மருத்துவ செலவுகள் ஏற்படும். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மகரம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.

கும்பம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்களின் உதவியால் கடன்கள் குறையும்.

மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

Previous articleபிக்பாஸ் ரித்விகா ன் அம்மா அப்பா தங்கச்சி ஐ பாத்திருக்கிங்களா!
Next articleஆகஸ்ட் 12 முதல் 18 வரை வார ராசிப்பலன் – ஆடி 27 முதல் ஆவணி 2 வரை !