12 ரசிகளுக்குமான மார்ச் மாத ராசி பலன்கள்! இந்த மாதம் எந்த ராசியினருக்கு அதிஸ்டக் காற்று வீசப்போகிறது!

0

12 ரசிகளுக்குமான மார்ச் மாத ராசி பலன்கள்! இந்த மாதம் எந்த ராசியினருக்கு அதிஸ்டக் காற்று வீசப்போகிறது!

மேஷம்

கடமையில் கண்ணியம் தவறாத மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத வகையில் பல திருப்பங்கள் நிகழும். இதுதான் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே நீங்கள் கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

தொழில் ரீதியான போட்டிகள் குறையும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த கடமைகள் நிறைவேறும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். திங்கட் கிழமையில் சிவ வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

எவரையும் அவரிடத்தில் இருந்து யோசிக்கும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ரொம்பவே அற்புதமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த சில விஷயங்கள் ஒருவழியாக முடிவுக்கு வரும்.

குடும்பத்தில் அமைதி நிலவும் எனினும் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த நெருக்கம் குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலையிலிருந்து தொழில் சூடுபிடிக்கும் துவங்கும். வியாபாரிகள் நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்

. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும்.

மிதுனம்

எதற்கும் கலங்காத மிதுன ராசியில் பிறந்த நீங்கள் இந்த மாதம் அற்புத பலன்களை பெற இருக்கிறீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

சுயதொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் காணும். உத்யோகத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு வேலை செய்வது நல்லது.

வியாபார தந்திரங்களை கையாளுவது உத்தமம். சுபகாரியத் தடைகள் விலகி ஒற்றுமை பலப்படும். பொருளாதாரம் ஏற்றம் காணும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் அகலும். ஞாயிறு தோறும் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

கடகம்

சொன்னதை செய்து காட்டும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டு என்பதால் கவனம் தேவை. சுப காரியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் நீடிக்காமல் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு சிக்கல் நீங்கும். சுயதொழில் புரிபவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது.

வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உத்தியோகஸ்தர்கள் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ராகு கால துர்க்கை பூஜை தடைகளை அகற்றும்.

சிம்மம்

யாரையும் ஏமாற்ற நினைக்காத சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூல பலன் தரும் நல்ல மாதமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை ஊதி பெரிதாக்காமல் ஆற போடுவது நல்லது.

அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும். சுய தொழில் புரிபவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சினைகள் தீரும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கருத்துக்களுக்கு ஒத்து போவது நல்லது. பொருளாதாரம் படிப்படியாக முன்னேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

தேவையற்ற கடன்களை தவிர்க்கவும். ஆரோக்கியத்தை கவனியுங்கள். சனிக்கிழமையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள்.

கன்னி

கவலையை மறந்து சிரித்துக் கொண்டிருக்கும் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உற்சாகத்துடன் செயல்பட கூடிய மாதமாக அமைய இருக்கிறது. இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் தீரும். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் மரியாதை உயரும். எதை செய்வதாக இருந்தாலும் குலதெய்வ ஆசி பெறுவது நல்லது. தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்

. வியாபாரிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பொருளாதாரம் ஏற்றம் காணும் என்பதால் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைகள் வந்து நீங்கும். சனிக்கிழமையில் தயிர் சாதம் தானம் செய்யுங்கள்.

துலாம்

நேர்மையின் சிகரமாக விளங்கும் துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் உங்கள் மனதை மேலும் வலிமைப்படுத்த கூடிய வகையிலான அமைப்பு என்பதால் கவலை கொள்ள தேவை இல்லை.

சுயகட்டுப்பாடு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சந்தேகங்களை களைவீர்கள். புதிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் பன்மடங்கு பெருக இருக்கிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு கடமையில் அக்கறை அதிகரிக்கும். மறைமுக போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். தேவையில்லாத பகையை வளர்த்துக் கொள்வது தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் ஏற்றம் அடையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாயில் முருகனுக்கு தீபம் ஏற்றுங்கள்.

விருச்சிகம்

கலைத் திறன் மிகுந்த விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத வகையில் உங்களுக்கு சில விசித்திரமான சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்க இருக்கிறது.

சுய தொழில் புரிபவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். வியாபார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

பணியிட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகும். குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

தனுசு

இனிமையான பேச்சாற்றல் கொண்டுள்ள தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் எண்ணற்ற நற்பலன்கள் காணப் பெறுகின்றன. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வரும்.

பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுயதொழில் புரிபவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பு அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரம் ஏற்றம் அடையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் குறையும். கந்தனுக்கு கவசம் பாடுங்கள்.

மகரம்

எவரையும் எளிதில் எடைபோடும் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. உங்கள் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை அமைதியான நிலையில் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். பிரிந்து சென்ற சில உறவுகள் மீண்டும் உங்களை வந்து சேர்வதற்கு யோகம் உண்டு.

சுப காரியத்தில் இருந்து வந்த குறுக்கீடுகள் விலகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

வியாபாரம் விருத்தியாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த நீண்டநாள் பாதிப்புகள் நீங்கும். திங்கட்கிழமையில் புளி சாதம் தானம் செய்யுங்கள்.

கும்பம்

பொறுப்புகளை வரமென ஏற்கும் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் விடுதலைக்கான மாதமாக அமைய இருக்கிறது. உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமையை கையாளுவதன் மூலம் அதிர்ஷ்டம் வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் பொழுது பேச்சில் இனிமை தேவை.

தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனக் கவலைகள் அகலும். ஆரோக்கியம் வலுப்பெறும். வியாழக்கிழமையில் குரு தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

மீனம்

மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசும் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சாதுரியமாக செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டை, சச்சரவுகள் குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

வியாபாரம் தொடர்பான விஷயத்தில் போட்ட பணம் இரட்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாகும் வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தேவையற்ற வீண் பழிகள் வந்து சேரலாம். பொருளாதார ரீதியான விஷயங்களில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகளை திறம்பட சமாளிப்பீர்கள். குறை தீர்க்கும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 03.03.2022 Today Rasi Palan 03-03-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஉங்கள் வருமானம் அதிகரித்து செல்வச்செழிப்பு ஏற்பட்டு லட்சாதிபதி ஆவதற்கு 12 ராசிக்கார்களும் செய்ய வேண்டிய‌ பரிகாரம்!