Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan 11.08.2018 இன்றைய ராசிப்பலன் சனிக்கிழமை!

11.08.2018 இன்றைய ராசிப்பலன் சனிக்கிழமை!

0
1030

11.08.2018 இன்றைய ராசிப்பலன் சனிக்கிழமை!

இன்றைய பஞ்சாங்கம்
11-08-2018, ஆடி 26, சனிக்கிழமை, அமாவாசை திதி பகல் 03.27 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.05 வரை பின்பு மகம். மரணயோகம் இரவு 12.05 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஆடி அமாவாசை. நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.

ரிஷபம்
இன்று உங்கள் மனதிற்கு புதிய தெம்பு கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி வாய்ப்பு உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். எடுக்கும் புதிய முயற்ச்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன் கிட்டும்.

கடகம்
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் கல்விக்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

சிம்மம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதமாகும். தெய்வ வழிபாடுகளில் அதிகம் ஈடுபாடு காட்டுவீர்கள்.

கன்னி
இன்று உங்கள் வீட்டிற்கு நவீன பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய மாற்றம் நிகழும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்
இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகப் பலன் உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வங்கி சேமிப்பு உயரும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் இருந்தாலும் நற்பலன்களும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும்.

தனுசு
இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகங்களில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். வியாபார வளர்ச்சிக்காக போடும் திட்டங்கள் வெற்றியை அளிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

மீனம்
இன்று உங்களுக்கு பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

Previous articleதம்பதிகள் கர்ப்ப காலத்தில் சேர்ந்திருப்பது சரியானதா ! அதனால் ஏற்படும் மாற்றம் என்ன?
Next articleவாய்ப்புண், வயிற்றுப் புண் அடிபட்ட‌ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் இருந்தால் மல்லிகைபூவை இப்படி பயன்படுத்துங்கள்!