Home thatstamil one india tamil oneindia tamil 11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை! காதலனுக்காக கணவனை கொலை செய்தேன்!

11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை! காதலனுக்காக கணவனை கொலை செய்தேன்!

0
416

தக்கலையில் கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மனைவி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜசேகர் – சுதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

ராஜசேகர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்திருந்த அவர், திடீரென மாயமானார். இது குறித்து சுதாவின் சகோதரர் ரவி, பொலிசில் புகார் செய்தார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்திவந்தபோதும், கடந்த 11 ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கில் திருப்பமாக ராஜசேகரை அவரது மனைவி சுதா மற்றும் அவரது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக்டேங்க்கில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிசார் செப்டிக்டேங்க்கில் கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர். பின்னர் தடயவியல்

சோதனையில் அந்த எலும்புக்கூடு ராஜசேகருடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ராஜசேகரின் மனைவி சுதாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுதா பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

நானும், ராஜசேகரும் கடந்த 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு ராஜசேகரின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இதில் பள்ளியாடியைச் சேர்ந்த ஆன்லின் சிபுவும் அடிக்கடி வந்து சென்றார். அவருக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். ஆன்லின் சிபுவுடன் நான், நெருக்கமாக இருந்ததை எனது கணவர் நேரில் பார்த்து கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம்.

கடந்த 9.2.2007-ம் ஆண்டு மதுவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தோம். பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், தலையணையால் அமுக்கி கொன்றோம். வீட்டின் செப்டிக் டேங்க்கில் ராஜசேகர் உடலை வீசினோம். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்தோம்.

ராஜசேகரை சிலர் தேடினார்கள். அப்போது அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன் என கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சுதாவை பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர், தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சுதாவின் கள்ளக்காதலன் ஆன்லின் சிபு உள்பட 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆன்லின் சிபு தற்போது கேரளாவில் தலைமறைவாகி உள்ளார். மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Previous articleஅதிர்ச்சி தகவல்! இளம் பெண்னை வெளிநாடு சுற்றுலா செல்ல அழைத்த வைரமுத்து!
Next articleதாயின் கள்ளக்காதலை நேரில் பார்த்த சிறுவன்! பின்பு தாய் எடுத்த அதிரடி முடிவு!