பிரான்ஸ் நாட்டின் வயதான இரட்டையர்கள், தமது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மேரி லெமாரி மற்றும் ஜெனிவிவ் ஆகிய இருவரும் தங்களது 100-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். கடந்த 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி இவர்கள் இருவரும் பிறந்துள்ளனர்.
இவர்களது 20 வயதில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பம் ஆகியதை, தமது நூறாவது பிறந்த தினத்தில் அவர்கள் நினைவுபடுத்தியுள்ளார்கள்.
இந்தநிலையில், போதையை தவிர்த்து, குடும்பத்துடன் நாட்களை செலவிட்டால் நூறு வயது வரை மகிழ்ச்சியாக வாழலாம் என இருவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: