திருடர்களில் பல ரகம் உண்டு. திருட்டைப் பொருத்தவரையில் எல்லோரும் ஒரே லாஜிக்கை பின்பற்றித் திருட முடியாது. அப்படி திருடினால் வுகமாக மாட்டிக் கொள்வார்கள். அதனாலேயே ஒவ்வொரு திருடனையும் நீங்கள் நன்கு கவனித்துப் பார்த்தால் தனித்தனி லாஜிக் வைத்திருப்பார்கள்.
சிலர் திருட்டில் கூட சில நேர்மையைக் கடைபிடிப்பார்கள். அதெல்லாம் கூட பரவாயில்லங்க. இப்ப ஒரு திருடனப் பத்தி பார்க்க போறோமே அந்த கதையைக் கேட்டா சிரிப்பு தாங்க வருது.
10 வருடங்கள்
கடந்த பத்து வருடங்களாக இந்த திருடன் ஒரு நூதன திருட்டை செய்து வருகிறான். இதுவரையிலும் பொலிசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அவன் பொலிசில் சிக்கிக் கொண்டான். விசாரணையில் தான் இவனுடைய திருட்டின் நியாய தர்மமும் புத்திசாலித்தனமும் தெரிந்திருக்கிறது. அந்த சுவாரஸ்ய தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
விசித்திர கொள்ளை
பொதுவாக நிறைய கொள்னைச் சம்பவங்கள் விகாரமானதாக இருக்கும். ஆனால் இந்த கொள்ளைச் சம்பவம் மிகவும் விசித்திரமான ஒன்று. ஏனென்றால் இவர் கடந்த பத்து ஆண்டுகளாக திருடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பத்து வருடங்களாக ஒரே பொருளை திருடியிருக்கிறார். இப்படி எந்த திருடனாவது செய்வானா? அந்த வேடிக்கை தான் என்ன?
லேடிஸ் ஸ்கூட்டி
இந்த கொள்ளைக் காரன் வாகனங்களை மட்டுமே திருடியிருக்கிறார். குறிப்பாக, பெண்கள் மட்டுமே ஓட்டக்கூடிய வகையில் உள்ள இலகு ரக வாகனங்கள மட்டுமே திருடுகிறாராம். கடந்த பத்து வருடங்களாக இவர் திருடிய அனைத்து வாகனங்களும் கியர் இல்லாத பெண்கள் ஓட்டக்கூடிய வாகனங்கள் தான்.
எங்கே வைத்திருந்தார்?
பொதுவாக திருடர்கள் தான் திருடிய பொருள்களை குறைந்த விலைக்காவது விற்று உடனே காசாக்கி விடுவார்கள். ஆனால் இந்த திருடன் இதில் வித்தியாசமானவனாக இருக்கிறான். தான் திருடிய எந்த வாகனத்தையும் அவன் விற்கவில்லை. எல்லா வாகனங்களையும் வேறு வேறு இடங்களில் ஒளித்து வைத்திருக்கிறான்.
பொலிசாருக்கோ அல்லது வேறு எவருக்கும் சந்தேகம் வராத வகையில், திருடிய வண்டிகளை ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் நிறுத்தி வைத்திருக்கிறார். அதேபோல் சிசிடிவி இல்லாத இடங்கள் ஏரியாக்களாக பார்த்து திருடியிருக்கிறார்.