10 வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை! மோகத்தினால் ஏற்பட்ட விபரீதம்!

0

சேலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்த பள்ளி ஆசிரியை, மாணவனோடு ஓடி போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூரைச் சேர்ந்த 26 வயதான எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரி பெண் ஒருவர் தனியார் டுட்டோரியல் கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் பாகல்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும் கடந்த மாதம் 19 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் கணவர் வேலைக்காக சென்னைக்கு சென்று விட, ஆசிரியை பெற்றோர் வீட்டிற்கு வந்து உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோரிடம் ஆசிரியை கோரிமேட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனையடுத்து பெற்றோர் தனது மகளை எங்கு தேடியும் காணாமல் போகவே, காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிந்து, காணாமல் போன ஆசிரியையை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அந்த ஆசிரியையும் அவருடன் 17 வயதே ஆன ஒரு மாணவனும் ஜோடியாக வந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் காதலித்த விஷயம் தெரியவந்துள்ளது.

அந்த பட்டதாரி ஆசிரியை பணி புரிந்த டுட்டோரியல் கல்லூரியில் பயின்ற அந்த மாணவனுக்கும் ஆசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. அதற்குள் ஆசிரியைக்கு திருமணம் நடந்து விடவே அவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

மேலும், ஓடிய அவர்கள் ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர். வீட்டில் தேடமாட்டார்கள் என்று எண்ணிய அந்த ஜோடி, தங்களை போலீசார் தேடுவதை அறிந்ததும், நேற்று காலை காவல் நிலையம் வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் அந்த மாணவனுக்கு 17 வயது என்பதால் அறிவுரை கூறி உள்ளனர். ஆனால், காதல் மோகத்தில் இருந்த அந்த ஆசிரியையும், மாணவனும் தாங்கள் வாழ்ந்தால் ஒன்றாகத்தான் வாழ்வோம் என்று அடம் பிடித்துள்ளனர். பின் ஒரு வழியாக மாணவனின் பெற்றோர் தங்களின் மகனை அழைத்துச்சென்றனர்.

ஆசிரியை விஷயத்தில் அவரின் பெற்றோரும், கணவர் வீட்டாரும் சேர்ந்து ஆலோசித்து முடிவெடுத்து கொள்ளுங்கள் என்று போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளியான பரபரப்பான தகவல்! நடிகை ரஞ்சிதாவுடன் ஓட்டம் பிடித்தாரா நித்தியானந்தா!
Next articleஒரு வேளை சாப்பிட போனவருக்கு கிடைத்த அதிர்ஷ்ட பொருள்!