10 நாட்கள் வெளியில் தங்கிவிட்டு தனது வீட்டுக்கு வந்த பிரபல நடிகை வடிவுக்கரசி! காத்திருந்த அதிர்ச்சி!

0
537

பிரபல நடிகை வடிவுக்கரசியின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்தர வேடங்களிலும் நடித்துள்ளவர் வடிவுக்கரசி.

இவரது வீடு சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது.

வடிவுக்கரசி வீடு இருக்கும் அதே பகுதியில் அவர் மகள் வீடும் உள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வடிவுக்கரசி திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது, அதிலிருந்த 8 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இது குறித்து வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகன் பொலிஸ் புகார் கொடுத்த நிலையில் குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: