1 கோடியே 99 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவான தங்கச் செருப்பு!

0
577

துபாய் மரினாவில் நடந்த ‘பெஷன் ஷோ’(fashion Show ) நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 24 கரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த செருப்பை துபாயில் வசித்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த அன்டோனியோ விட்ரி (Antonio Vietri ) என்பவர் வடிவமைத்து தயாரித்துள்ளார். 30 கரட் வைரங்கள் மற்றும் கடந்த 1579 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் ஆகியவைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதன் குதிகால் பகுதியானது துபாயில் இருக்கும் உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 கோடியே 99 லட்சம் அமெரிக்க டொலர்களாகும்.

ஏற்கனவே 1 கோடியே 55 இலட்சம் அமெரிக்க டொலர் மதிப்பில் உருவாக்கப்பட்ட செருப்பு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது. தற்போது துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தங்க செருப்பு, அதனை முறியடித்து உலகிலேயே அதிக விலையுயர்ந்த செருப்பாக மாறியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: