09 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபரான தந்தை, எம்பவ பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதுடன், மகள் தற்போது கர்ப்பிணியாகவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமி வயிற்று வலி காரணமாக குளியாப்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து , சிறுமி 04 மாத கர்ப்பிணியாகவுள்ளமை அறியவந்துள்ளது.
சிறுமி பருவமடைந்த காலத்தில் இருந்தே தந்தை அவரை இடைக்கிடையே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சிறுமி கர்ப்பமாகாமல் இருப்பதற்கு கருத்தடை மாத்திரைகளையும் கொடுத்து வந்துள்ளார் தந்தை.
இந்நிலையில், சந்தேக நபர் குளியாப்பிடிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.