Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan 04.12.2018 இன்றைய ராசிப்பலன் – செவ்வாய்க்கிழமை !

04.12.2018 இன்றைய ராசிப்பலன் – செவ்வாய்க்கிழமை !

0
1395

இன்றைய பஞ்சாங்கம்
04-12-2018, கார்த்திகை 18, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பகல் 12.20 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 02.59 வரை பின்பு விசாகம். சித்தயோகம் பின்இரவு 02.59 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

கடகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

கன்னி
இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். தேவைகள் நிறைவேறும்.

துலாம்
இன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் புரிபவர்க்கு தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்.

தனுசு
இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

மகரம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். மன நிம்மதி ஏற்படும்.

கும்பம்
இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும்.

மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

Previous article2019 rishapa rasi palan – 2019 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ரிஷப ராசி!
Next articleராகு- கேது பெயர்ச்சி பலன்கள்! 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் – அதிர்ஷ்டம் யாருக்கு?