Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan 03.06.2019 இன்றைய ராசிப்பலன் – திங்கட்கிழமை!

03.06.2019 இன்றைய ராசிப்பலன் – திங்கட்கிழமை!

0
683

இன்றைய பஞ்சாங்கம்
03-06-2019, வைகாசி 20, திங்கட்கிழமை, அமாவாசை திதி பகல் 03.32 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் இரவு 12.05 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் இரவு 12.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை.

இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் முலம் சுபசெய்திகள் கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். எதிலும் நிதானம் தேவை.

கடகம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும்.

கன்னி
இன்று குடும்பத்தில் வரவிற்கேற்ப செலவுகள் இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் நிம்மதியை தரும்.

துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.

தனுசு
இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். குடும்பத்தில் திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

மகரம்
இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

கும்பம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக கூட்டாளிகளுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் கடினமான காரியங்களை கூட எளிதில் முடித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

Previous articleநடிகர் சாந்தனுவை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம்! ரசிகர்களுக்கு பெரும் இழப்பு!
Next articleஞானசார தேரரின் காலக்கெடு! பரபரப்பாகும் கண்டி – கடைகளை மூடும் சிங்களவர்கள்!