ஹைதராபாத்தில் என் கவுண்டர் செய்யப்பட்ட கிடக்கும் சடலங்கள் கையில் துப்பாக்கி!

0

ஹைதராபாத்தில் என் கவுண்டர் செய்யப்பட்ட கிடக்கும் சடலங்கள் கையில் துப்பாக்கி!

ஹைதராபாத்தில் என் கவுண்டர் செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் இரண்டு உடல்களின் கையில் ஆயுதங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கால்நடை மருத்துவர் பிரியங்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நான்கு பேர் இன்று பொலிசார் நடத்திய என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முதற்கட்டமாக, சம்பவயிடத்தில் நடந்த விசாரணையின் போது அவர்கள் தப்பி முயன்றதாகவும், அவர்களை பிடிக்கும் முயற்சியில் என் கவுண்டர் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது. இந்நிலையில், என் கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் நான்கு சடலங்கள் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்டவரின் இரண்டு உடல்களின் கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருப்பதை காணலாம்.

தற்போது, காவல்துறை இன்னும் தங்கள் நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மக்புப்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவன்முறை வெடித்தது! பிரான்ஸில் பிரதமர் எத்துவார் பிலிப்பின் ஓய்வூதிய திட்டதை எதிர்த்து மாபெரும் வேலை நிறுத்த போராட்டம்!
Next articleபேஸ்புக் நிறுவனத்தினால் இன்ஸ்டாகிராம் பயனர்களின் வயதை சேகரிக்க முடிவு !காரணம் என்ன?