திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த வியாபாரியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வட்டாரம், வீரஞ்சோலை, குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீண்ட காலமாக குச்சவெளி பகுதியில் ஹெரொயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக குச்சவெளி போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போதே அவரை மூன்று கிராம் ஹெரோயினுடன் கைது செய்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்த சந்தேகநபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.




