ஹடிவத்த பிரதேசத்தில் – தகாத உறவினால் ஏற்பட்ட விபரீதம்

0
526

ஹபராதுவ – ஹடிவத்த பிரதேசத்தில் பெண் ஒருவர் மற்றும் ஆண் ஒருவர் புகையிரதம் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நேற்று மாலை கொழும்பு கோட்டை தொடக்கம் மாத்தறை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதம் முன் குதித்து அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஹபராதுவ பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரும், 54 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பெண் ஒரு பிள்ளை தாயார் என்பதுடன், நபர் இரு பிள்ளைகளின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தகாத உறவு காரணமாகவே இருவரும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

ஹபராதுவ காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Previous articleமச்சம் இந்த இடத்தில் இருந்தால் செல்வம் கொட்டுமாம்!
Next articleபிரதோஷத்தை யாரெல்லாம் கடைபிடிக்க வேண்டும்.