ஸ்டாலின் தன்னை கடத்தியது பற்றி பல ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த நடிகை பாத்திமா பாபு…!

0
729

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தன்னை கடத்தவில்லை என்று நடிகையும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு விளக்கம் அளித்துள்ளார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இளைஞராக இருந்த போது, ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த பாத்திமா பாபுவை கடத்தியதாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

இன்று வரை திமுகவை விமர்சிப்போர், தவறாமல் இந்தச் தகவலை குறிப்பிட்டு கூறினாலும், இந்த தகவல் உண்மையா வதந்தியா என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாத்திமா பாபுவே தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி அவர் பேசுகையில்,”என் வாழ்வில் அப்படிபட்ட ஒரு சம்பவமே நடக்கவில்லை.

ஆனால், ஸ்டாலின் என்னை கடத்தியதாக செய்திகள் வந்தது. இதற்கு நான் அப்போதே வார இதழ் ஒன்றுக்குவிளக்கம் அளித்தேன்.

ஆனால்,நான் கூறியதை மற்ற எந்த ஊடகங்களும் போடவில்லை. இப்போதும் கூறுகிறேன், ஸ்டாலின் என்னை கடத்தவில்லை. இப்படி வதந்தியை கிளப்பி ஒரு கட்சியின் செயல்தலைரவரின் குணநலன்களை விமர்சிப்பது தவறு என பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

Previous articleகருணைக் கொலை செய்யப்பட்ட இனுக்கா!!
Next articleஇறப்புக்கு கூட யாரும் வரல! கண்ணீருடன் எம்எஸ் ராஜேஸ்வரியின் மகன்!