வைரலாகும் புகைப்படம்! வெளிநாட்டு உயிர்த்தோழியுடன் விஜயகாந்தின் மகன்!

0
699

நெதர்லாந்தில் 7 மாதங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் தற்போது இந்தியா திரும்பிவிட்ட போதிலும் தனது நெதர்லாந்து தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

நெதர்லாந்துக்கு சென்றிருந்தபோது இவருக்கு அந்நாட்டு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவரை தனது உயிர்த்தோழி என கூறிக்கொள்கிறார் சண்முகபாண்டியன்.

இன்று அவருக்கு பிறந்தநாள், எனவே தன் தோழிக்கு இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் வாழ்த்துக் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, தன் வாழ்நாளிலே சிறந்த நாள்கள் என்று நெதர்லாந்தில் வாழ்ந்த 7 மாத காலத்தை குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்த்தின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கான விழாவில் கலந்துகொள்ளாமல், நெதர்லாந்தில் இருந்தபடியே அவருக்கு வீடியோவின் மூலம் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது,

Previous articleபிரபல தமிழ் சின்னத்திரை நடிகை கைது!
Next articleபிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ஜோடி. பிணமாக கிடந்த பரிதாபம். என்ன நடந்தது தெரியுமா?