வைரலாகும் புகைப்படங்கள்! தேனிலவுக்கு ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா எங்கு சென்றுள்ளார் தெரியுமா!

0
603

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட செளந்தர்யா தனது தேனிலவு புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும், விசாகன் என்பவருக்கும் கடந்த 11-ஆம் திகதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள்.

இந்நிலையில் திருமணம் முடிந்து ஐஸ்லாந்துக்கு செளந்தர்யாவும், விசாகனும் தேனிலவு சென்றுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்களை செளந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ஐஸ்லாந்தில் தேனிலவில் உள்ளேன், என் மகன் வேத் கிருஷ்ணாவை மிஸ் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

செளந்தர்யாவின் டுவிட்டர் பதிவு வைரலாக பரவி வருகிறது.

Previous articleரஜினிக்கு இது தேவையா! தமிழக ராணுவ வீரர் வெளியிட்டுள்ள வீடியோ! வைரலாகும் சரமாரி கேள்விகள்!
Next articleகாஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கோவில்பட்டி விவசாயியின் மகன் பலி! கதறி அழுத சுற்றுப்பட்டி கிராம மக்கள்!