வைரமுத்து பற்றிய‌ சின்மயி டுவிட்டுக்கு நதியாவின் கருத்து என்ன!

0
608

இந்தியா முழுக்க ”மீடூ MeToo” என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுக்க ஒரு ஹேஸ்டேக் பல புயல்களை, பல குற்றச்சாட்டுகளை, பல தீர்வுகளை, பல சர்ச்சைகளை சுமந்து வலம் வருகிறது என்றால் அது ”மீடூ MeToo” ஹேஷ்டேக் என்று எளிதாக சொல்லிவிடலாம். இந்த ஹேஸ்டேக்கில் சென்று 10 நிமிடம் படித்தாலே பல அதிர்ச்சிகரமான தகவல்கள் நமக்கு கிடைக்கும்.

சிலநாள் முன் ஹிந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த நடிகை, இயக்குனர் நானா படேகர் (காலா பட வில்லன்) தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். இதனைதொடர்ந்து வைரமுத்து, ராதாரவி போன்றவர்கள் மீது குற்றம் வந்தது.

தற்போது Metoo ஹாஸ்டாகினை பற்றி நடிகை நதியாஅவரது அபிப்பிராயம் என்னவென்பது பற்றி விளக்கமாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

முதலாவதாக மேலிடத்தில் இருப்பவர்கள் யாரும், யாரிடமும் சலுகைகள் எடுத்துக்கொள்ளகூடாது. இது ஒரு முதற்கட்டமே, இன்னும் பல பெண்கள் முன்வந்து இதுபோன்று பேசவேண்டும்.

ஆண்கள் தங்கள் உரிமைக்காக பேசுகின்றனர். அதுபோல் பெண்களும் பேச வேண்டும்.

இதைப்பற்றி பெண்கள் பேசுவது மிகவும் நல்லது நான் அதை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

Previous articleவிடுதியில் வைரமுத்து மனைவி இளம்பெண்களிடம் கூறியது என்ன? அவர் அப்படித் தானா!
Next articleபரபரப்பு டுவிட் போட்ட சமந்தா! சின்மயி சொல்வது உண்மை தான்!