வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு! காய்ச்சல் குறையாததால் பரிதாபம்!

0
394

ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 8 வயது சிறுமியொருவர் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

ஹொரவபொத்தான, றத்மலை பகுதியை சேர்ந்த இக்லாஸ் ராசானா என்பவரின் 8 வயது மகளான அப்லா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரத்மலை முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியான இவர் நேற்று காய்ச்சல் காரணமாக பாடசாலையில் இருந்து 10 மணியளவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் மருந்து எடுத்துள்ளார். எனினும் காய்ச்சல் குறையாத நிலையில் இன்று மகாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தை தோண்டிய போது கிடைத்தது என்ன?
Next articleகுழந்தை இல்லாமல் இருந்த‌ தம்பதியினருக்கு ஒரே தடவையில் அடித்த ஜாக்பாட்