Home Jaffna News வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை! வீதியால் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை! வீதியால் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

0
353

மொனராகலையில் வீதியால் சென்ற பெண்ணெ வழிமறித்த மர்ம குப்பல் வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பெண்ணை வீதியில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனமல்வில செவனகல பொலிஸ் பிரிவில் கிரிவெவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இருவர் அவரை வீதிக்கு அருகிலுள்ள பகுதிக்கு இழுத்து சென்று கொடூரமாக துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

குறித்த பெண் அவல குரல் எழுப்பிய நிலையில், அங்கிருந்தவர்கள் இளைஞர்களை சுற்றிவளைத்துள்ளனர். எனினும் சந்தேக நபர்களில் ஒருவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மற்றைய சந்தேக நபர் பெண்ணின் கழுத்தில் இருந்த 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Previous articleயாழில் அனுக்ஷ்டிக்கப்பட்ட‌ காந்தி ஜெயந்தி!
Next articleஆசிட் குடித்து தற்கொலை செய்த கணவன்! வாட்ஸ் அப் பயன்படுத்துவதை நிறுத்த சொன்ன மனைவி!