வேகமாக அழிவடைந்து செல்லும் நிலையில் சிங்கள இனம்!

0
384

சிங்கள இனத்தின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜகீய பண்டித தெரிபெஹா மேதாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் அண்மையில் நடைபெற்ற பௌத்த உரிமை ஆணை குழுவில் சாட்சியமளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் கூறுகையில், சிங்கள மக்களின் வளர்ச்சி வேகம் பாரியளவு பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் இந்ததொகை 0.5 வீதமாகவே காணப்பட்டது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் சிங்கள இன சமூகத்தின் வளர்ச்சி வேகம் சூன்யமாக கூடும்.

அதாவது பெற்றோர் இரண்டு பிள்ளைகளுடன் நிறுத்தி கொள்ளும் நிலைமையே காணப்படுகின்றது. 2020ஆம் ஆண்டின் பின்னர் சிங்கள சமூகத்தின் வளர்ச்சி வேகம் மறை பெறுமதியை எட்டும்.

இதனால் சிங்கள இனம் வேகமாக அழிவடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது.

நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள இன சமூகத்திற்கு இடையில் ஒற்றுமையின்மையே இந்த அழிவிற்கான பிரதான ஏதுவாக குறிப்பிட முடியும் என அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

Previous articleஈழத்து சிறுமியுடன் மீண்டும் மோதும் சிங்கப்பூர் சூர்யா! இறுதி நிமிடத்தில் அடித்த அதிர்ஷ்டம்! யார் வெற்றியாளர்!
Next articleகடவுச்சீட்டு விநியோகத்தில் இன்று முதல் புதிய நடைமுறை அமுல்!