பிக்பாஸ் சீசன் 3ன் பட்டத்தை தர்ஷனே வெல்வார் என பலரும் கணித்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக அவர் நேற்று வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியே.
இதனால் அந்த டிவிக்கு எதிராக மோசமாக பலரும் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தர்ஷன் வெளியே வந்ததும் அவருக்கு ஆதரவாக மேடையிலேயே மக்களின் கைதட்டல்களை பார்த்து நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.
இந்நிலையில் அவரது காதலியான சனம் ஷெட்டியை சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சனம் ஷெட்டி, 98 நாட்களுக்கு பின்னர் சந்திப்பதில் மகிழ்ச்சியே, இருந்தாலும் எனக்கு இது மிகவும் வருத்தமான புகைப்படம் தான்.
நீ தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும், கோடிக்கணக்கான மக்களின் மனங்களை ஜெயித்துவிட்டாய், பல அதிசயங்கள் காத்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: