பெண்களின் ஒழுக்கமே சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. அந்த ஒருவனும் ஒருத்தியும் பிறன்மனை நோக்கா பெருவாழ்வு வாழவேண்டும் என்பதை வள்ளுவர் திருக்குறளில் அழுத்திக் கூறியுள்ளார்.
ஆணோ பெண்ணோ இதை நெறியில் இருந்து வழுவினால் சமூகத்திற்கே பெரும் கேடு விளையும் என்பது உண்மை.இன்று அந்நிலை மாறி ஆண், பெண் என்ற இருபாலர் இடத்திலும் சமூக கலாச்சார நெறி பிறழ்வு சர்வசாதாரணமாகி விட்டது.
அதாவது சமூக நெறி பிரழ்வடைந்து சீரழிவது ஒரு ஆணாக இருக்கலாம். பெண்ணாக இருக்கலாம். இந்நெறிப் பிறழ்வினால் இல்லற வாழ்வு சீர்கெட்டுப் போகின்றது.மேலும் குடும்பவாழ்வு சிதைவுபடுகின்றது. சமூக கட்டுக்கோப்பு குறைகின்றது. சமுதாயமே சீரழிந்து போகும் நிலை ஏற்படுகிறது.
கலை கலாசாரப் பண்பாடுகள் சிதைந்து போகின்றன. சந்ததியின் சிறப்பு அழிந்து போகின்றது. இவ்வாறே சமூகத்தின் விழுமியங்கள் அனைத்தும் வீ்ழ்த்தப்படுகின்றன.
கிளிநொச்சியில் அநியாயமாக ஒரு பெண் கொல்லப்பட்டமைக்கு இந்த சமுகத்திற்கு ஒவ்வாத காலாச்சார நெறிபிறழ்வினால் ஏற்பட்ட தகாத உறவே காரணமாகும்.
கொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பரே குறித்த பெண்ணை கழுத்து நெரித்தே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்
குறித்த அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில் குறித்த பெண்ணுடன் தனக்கு கள்ள தொடர்பு இருந்தது என்றும் அவரது வயிற்றில் வளந்த குழந்தை என்னுடையதுதான் என்றும் அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறும் இல்லாவிட்டால் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று கூறி வற்புறுத்தினாள். இதன் காரணணமாகவே அவளை கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை என்பவற்றைக் வைத்து இன்று மதியம் குறித்த ஆடைத் தொழிற் சாலையில் கடமையில் இருந்த குறித்த உத்தியோகத்தரை கைது செய்து விசாரணைக்கு உட்ப்படுத்திய பொழுதே சந்தேக நபர் மேற்கண்டவாறு ஒப்புதல் வாக்கு மூலத்தினை வழங்கியுள்ளார்.
சம்பவ தினத்தன்று இருவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்வதற்கு முடிவெடுத்து 28.08.2017 அன்று அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிலில் ஏறிக் கொண்டேன்.
அம்பாள் குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம் வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள் அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்க்குள் சிறு பிரச்சனை வந்துவிட்டது அதன் பின்னரே அவள் பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் வந்தமையால் அவளது கழுத்தில் பட்டியில் அவளது தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.
இறந்தவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக் அவளது பாவாடை மேற் சட்டடை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டனர்.
பின் மோட்டார் சைக்கிளில் வந்து கனகபுரம் பகுதியில் அவளின் பாவாடையை எறிந்துவிட்டு கான்பாக் மற்றும் மேல் சேட்டு என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல் வீட்டுக்கு வந்தேன் வந்து பின்பக்காக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கில் கேல்மற் என்பவற்றை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டுவந்தேன் குடித்து நானும் சாவோம் என்று பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் ஒளித்து வைத்திவிட்டேன்.
சம்பவ இடத்தில் பெலிற் மற்றும் சில தடையங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன் இக் கொலையை நான் மட்டுமே செய்தேன் என்னால் சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் என்னால் காட்ட முடியும் நான் தான் இதனை செய்தேன் என குறித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைக்கும் துன்பியல் சம்பவத்திற்கும் சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரும் தமது நடத்தை தவறியதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது.
ஒரு சில மணி நேர இன்பத்திற்காக தம்மை மறந்து பிழை என தெரிந்தும் வேண்டுமென்றே இத்தகைய செயற்றாடுகளில் ஈடுபடுவதனால் குடும்பமானம் மரியாதை காற்றில் பறப்பதுடன் பெறுமதியான உயிரும் பறிபோகும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.
எமது தமிழ் கராச்சாரத்துக்கு ஒவ்வாத இத்தகைய செயபாடுகளும் விபச்சாரத்திற்கு ஒப்பானதே. அதிகரித்துவரும் இச்சீர்கேட்டில் இருந்து நாம் சமுதாயத்தை மீட்பதற்கு அனைவரின் பங்களிப்பும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது.
இது பற்றிய விழிப்புணர்வை எமது சமூகத்திற்கு வழங்குவதோடு இத்தகைய தகாத உறவுகளில் ஈடுபடுபவருக்கும் சமுகப்பிரச்சினைகளுக்கு காரணமானவர்களுக்கும் வாழ்வு நெறி தவறி நடப்பவர்களுக்கும் கடுமையான தண்டனை விதிப்பதன் மூலம் சமூக சீர்கேடுகளில் இருந்து சமூகத்தினைப் பாதுகாக்க முடியும்,