நடிகை நிலானியிடம், துணை இயக்குநர் லலித்குமார் ஏடிஎம் கார்டு, பாஸ்புக் கேட்டு மிரட்டும் ஆடியோக்களை நிலானி வெளியிட்டுள்ளார். துணை இயக்குநர் லலித்குமார் மற்றும் சின்னத்திரை நடிகை நிலானி காதலித்தனர். ஆனால் லலித்குமார், நிலானியை தொடர்ந்து பல்வேறு தொல்லைகளுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசில் நிலானி புகார் அளித்தபிறகு, லலித்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், நிலானி திடீரென தலைமறைவானார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
லலித்குமார் செய்த கொடுமைகளால் அவரை விட்டு விலகியதாகவும், அவர் தற்கொலைக்கு நான் எப்படி காரணமாக முடியும் என்றும் கேட்டார். ஆனால், லலித்குமார் சகோதரர் நிலானியை குற்றம்சாட்டினார். இதையடுத்து நிலானி நேற்று கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிசார் மிரட்டல்
முதலில் உள்ள ஆடியோவில் லலித் குமார் நிலானியை யார் என்று தெரியாது என காவல் நிலையத்தில் கூறிவிட்டு பின் மீண்டும் அவரை தொந்தரவு செய்துள்ளார். இதனை கேட்ட பொலிசார் ஒருவர் காந்தியை ஏச்சரிப்பது போன்ற ஒரு காணொளி வெளியாகியுள்ளது.
பாஸ்போட்டு, ஏடிஎம் கார்டு கொடு
வீட்டுக்கு வெளியே நின்றபடி, நிலானியின் ஏடிஎம் கார்டு, வங்கி பாஸ்புக்கை வெளியே போடும்படி லலித்குமார் கேட்கிறார். அதற்கு நிலானி மறுப்பு தெரிவிக்கிறார். “ஏடிஎம் கார்டு, பாஸ்புக் தர முடியாது” என நிலானி கூற, “கீழேதான் உள்ளேன், அதை எட்டி போடு. உனக்கு என்ன ஆகிவிடும்” என்கிறார் லலித்குமார்.
தொடந்து வெளியாகும் ஆடியோக்களில் நிலானிக்கு காந்தி அளித்த தொந்தரவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.