கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1, சீசன் 2, என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது.
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதனை தற்போது விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் ” வாரம் ஒரு தலைவர், தினமும் ஒரு சண்டை யார் எந்த கட்சின்னு புரியறதுக்குள்ள 100 நாட்கள் ஒடோடும். பிக்பாஸ் 4 டேஸ் டூ கோ” என கமல் கெத்தாக பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் மெகா வைரலாகி வருகிறது.
இன்னும் நான்கே நாட்களில்.. #BiggBossTamil ?
வர்ற ஞாயிறு இரவு 8 மணிக்கு ஆரம்பமாகுது..! #4DaysToGo #BiggBossTamil3 #BiggBoss3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/l17VtOD9dp
— Vijay Television (@vijaytelevision) June 19, 2019
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் இனி திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.




