தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிரஞ்சீவி நடிக்க “சைரா நரசிம்மா ரெட்டி” என்ற திரைப்படம் விரைவில் திரைகாணவுள்ளது இந்தப் படம். இந்திய சுதந்திர போராட்ட வீரரான, ராயலசீமாவில் வாழ்ந்த உய்யவலாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன். இதன் விளம்பர முன்னோட்டம் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளது.
‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாகியுள்ள நிலையில், சைரா நரசிம்மா ரெட்டியாக இந்தப் படத்தில் வாழ்ந்து நடித்திருக்கும் நடிகர் சிரஞ்சீவியுடன், பொலிவூட் உச்ச நட்சத்திரமாக விளங்கிய அமிதாப் பச்சன் மற்றும் தமிழ்த் திரையுலக ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருக்கின்றார்கள்.
இந்நிலையில், “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘சூப்பர் குட்’ பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றிக்கொண்டுள்ளது. தமிழில் பல வெற்றி படங்களை தயாரித்த பிரபலமான நிறுவனமான ‘சூப்பர் குட்’ பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதன் மூலம் எல்லோரிடமும் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்திற்கான ஆர்வத்தை அதிகம் உண்டாக்கியுள்ளது.
காரணம், அனுபவம் வாய்ந்த ஒரு நிறுவனம், இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது என்றால், படத்தின் தரம் மற்றும் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன என்பது அர்த்தம் என்கின்றனர் விஷயமறிந்த தரப்பினர்.




