வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்! வீட்டில் அவர் கண்ட காட்சி!

0
425

கேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார்.

கொல்லத்தை சேர்ந்த நபருக்கும், இளம் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் மனைவிக்கு அருண்குமார் என்பவருடன் பேஸ்புக் மூலம் ஆறு மாதங்களுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டது.

இது காதலாக மாறியது, இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருவதாக மனைவியிடம் கூறினார்.

இதையடுத்து அப்பெண் வீட்டில் இருந்த அதிகளவிலான நகைகள் மற்றும் லட்சக்கணக்கான பணத்துடன் அருண்குமாருடன் ஓட்டம் பிடித்தார்.

அவர் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டாம் நாள் ஊருக்கு வந்த கணவர், மனைவி நகை, பணத்துடன் வேறு நபருடன் ஓட்டம் பிடித்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பொலிசில் அவர் புகார் கொடுத்தார், இந்த சூழலில் அருண்குமார் தன்னுடன் வந்த பெண்ணை பல இடங்களுக்கு அழைத்து சென்று பல்வேறு விடுதிகளில் தங்கியுள்ளார்.

அந்த பெண் கொண்டு வந்த பணம் மொத்தமும் தீர்ந்த பின்னர் அவரை அறையில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்த துவங்கினார் அருண்குமார்.

இந்நிலையில் ஏற்கனவே திருமணமான அருண்குமாரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

அவருடன் இருந்த பெண்ணும் மீட்கப்பட்டு அவர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அருண்குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous articleபிக்பாஸில் கவினிடம் காதலை வெளிப்படுத்திய அபிராமியின் நிலமை என்ன தெரியுமா! கவின் சொன்ன பதில் இதுதான்!
Next articleஅன்று வீடில்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட இளம் பெண்! இன்று அவரின் நிலை என்ன தெரியுமா!