வெளிநாட்டிலிருந்து வந்து யாழ் சென்றவர்களின் வாகனம் விபத்து! 10 பேர் படுகாயம்! இருவரின் நிலை கவலைக்கிடம்!

0
326

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் வரையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும், அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின், மாரகஹவெவ 27ம் கட்டை பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றோடு மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிலரே குறித்த வானில் இருந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleஆகஸ்ட் மாத ராசி பலன்கள்!
Next articleகழுத்தில் கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்! கிளிநொச்சியில் சம்பவம்!