வெளிநாட்டிலிருந்து தாயகம் வந்த யாழ் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

0
422

பிரித்தானியாவிலிருந்து தாயகம் திரும்பிய வயோதிப பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 64 வயதான பெண்ணொருவரே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி சப்பச்சிமாவடி பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

லண்டனிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிப பெண் நீண்ட நேரம் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் தேடிய நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleஉயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Next articleஇலங்கையில் மூடிமறைக்கபடும் தமிழர்களின் கலாச்சாரம்! வெளியான புகைப்படத்தால் கொதிப்பில் தமிழ் மக்கள்!