வீட்டில் அதிகமாக பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமா? இதோ சில வழிமுறைகளை !

0
632

பணக்கஷ்டம் எல்லோர் வாழ்விலும் தினசரி சந்திக்கும் பிரச்சினைகளுள் ஒன்றாகும்.

பணக்கஷ்டத்திலிருந்து விடுபட ஆன்மீகத்திலும் பரிகாரங்கள் பல உள்ளன.

அந்தவகையில் நம் வீட்டில் அதிகமாக பணப்புழக்கம் அதிகமாக சில வழிமுறைகளை தினசரி முறையாக பின்பற்றி வந்தால் நல்ல தீர்வைக் காணலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

அதிகாலை விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, காலை எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது கண்ணாடியில் முகத்தை பார்க்க வேண்டும்.

காலை கடன்களை முடித்து குளித்து முடித்து விட்டு, முதலில் முகத்தை துடைக்காமல், முதுகுப் பகுதியை துணியால் துடைக்க வேண்டும்.

உடலை தூய்மை படுத்திய பின் ஈரமான துண்டு அல்லது வேஷ்டியை உடுத்திக் கொண்டு பூஜை அறைக்குள் சென்று, கடவுளை வணங்க வேண்டும்.

பூஜை அறையானது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். தினமும் காலையில் பூஜை செய்து முடித்த பின் காகத்திற்கு உணவை வைத்து விட்டு, காலை உணவை சாப்பிட வேண்டும்.

சங்கு லஷ்மி தேவியுடன் தொடர்பு உடையதால், அதை நம் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இதனால் நம் வீட்டின் செல்வம் அதிகரிக்கும்.

பணம் வைக்கும் அலமாரி, பீரோ ஆகியவற்றை வீட்டின் தெற்கு திசையில் வைத்து, அதன் முகம் வடக்கு திசையை நோக்கி அமைக்க வேண்டும்.

படுக்கை அறையில் கட்டில் கால்கள், அலமாரிகள் மற்றும் இதர மரப் பொருட்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சேதமடைந்த மரப் பொருட்கள் வீட்டில் எதிர்மறை சக்தியை ஈர்க்கும்.

தினமும் மாலையில் சந்தியா நேரத்தில் நம் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். அல்லது அந்த நேரத்தில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கூட வரலாம்.

Previous articleஆகஸ்ட் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்கள் : எந்த திகதியில் பிறந்தவர்களுக்கு நன்மை?
Next articleதிருமணத்திற்கு பிறகும் இப்படி வெளிச்சம் போட்டு காட்டணுமா? ஆர்யா கொஞ்சம் பாவம் தான்!