விஷால் ஜோடியாக தல பட நாயகி ; அடுத்த பட அறிவிப்பு !

0
333

உலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான விஷால், திரையுலகுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. பதினைந்து ஆண்டுகளில் அவர் 27 படங்களில் நடித்து இருக்கிறார்.
விஷாலின் 28-வது படத்தை சொந்த பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியே தயாரிக்கிறது. அதில் விஷால் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கசண்ட்ரா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

ஸ்ரதா ஸ்ரீநாத், `விக்ரம் வேதா,’ `நேர்கொண்ட பார்வை’ ஆகிய 2 படங்களிலும் நடித்தவர். ரெஜினா கசண்ட்ரா, `ராஜதந்திரம்,’ `மாநகரம்’ படங்களில் நடித்தவர்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடக்கிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை மீண்டும் சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Previous articleஇந்த ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.. மற்றவர்களை பற்றி கவலைபடமாட்டார்களாம்..!
Next articleகாதலரின் படத்தில் கண் பார்வையற்றவராக நயன்தாரா !!