சின்னத்திரை நடிகை வாணி போஜன் இன்று தமிழ் பேசும் மக்களின் இல்லத்து அரசியாக திகழ்கின்றார்.
இவருக்கு அண்மையில் ”சின்னத்திரை நயன்தாரா” என்ற பட்டம் சூட்டப்பட்டது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட தெய்வமகள் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் வரவேற்பை பெற்றிருந்தார்.
வாணி போஜன் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னர் கிங்ஃபிஷர் விமானத்தில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
அதோடு வடிவமைப்பு விளம்பர வேலையும் செய்து வந்துள்ளார். வடிவமைப்பு விளம்பரம் மூலமாகவே சின்னத்திரையில் நாயகியாகியுள்ளார்.
இவர் 150க்கு மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இவருக்கு சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாணி போஜன் விருது வழங்கும் நிகழ்வில், எஸ். ஜே. சூர்யாவுடன் நடிக்க விரும்புவதாகவும், அவரை மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், முதலாவது விருது வழங்கும் நிகழ்வில் வாணி போஜன் தெரிவு செய்யப்பட்டமையானது அதிஷ்டமாக நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் ???கலாட்டா நட்சத்திர விருதுகள் #ZeeTamil #GNA #Galatta #GalattaAwards #GalattaNakshatraAwards #ஜீதமிழ் Galatta Media
Posted by Zee Tamil on Wednesday, May 2, 2018