விபரீத ஆண் நண்பன்! மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்! அங்கு நடந்தது என்ன! பள்ளி மாணவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

0
642

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆண் நண்பனை சென்ற 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவி அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி நிதின் என்ற இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி மாணவியின் வீட்டிற்கு சென்ற இளைஞர், ஜாலியாக பைக்கில் ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாம் என கூறியுள்ளார்.

இதற்கு ஆசைப்பட்டு மாணவியும் பைக்கில் சென்றுள்ளார். இந்நிலையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தந்தை தனது மகளை காணவில்லை என தேடியபோது, நிதின் என்பவருடன் உங்கள் மகள் பைக்கில் சென்றாள் என அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளியே சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் இதுதொடர்பாக தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நிதின் பயன்படுத்திய செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இருப்பது தெரியவந்தது.

அங்கு சென்று தனிப்படை காவல்துறையினர் நடத்திய சோதனையில், அங்கிருக்கும் ஒதுக்குப்புறமான வீட்டில் மாணவி அடைத்துக்வைக்கப்பட்டிருந்தார். அவருடன் நிதின் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.

விசாரணையில் மாணவி அளித்த வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பைக்கில் அழைத்து சென்றபோது நீண்ட தூரம் பயணம் செய்யலாம் என நிதின் கூறியுள்ளார். பின்னர், தனது நண்பர் ஓருவரின் வீட்டுக்கு சென்று முகத்தை கழுவிவிட்டு செல்லலாம் என கூறி அந்த வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இடையில், 17 வயது கூட்டாளி சிறுவனையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு, தனி வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இதனை கூட்டாளி சிறுவன் வீடியோ எடுத்துள்ளான்.

பின்னர், அந்த வீடியோவை வைத்து சிறுவனும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு நாள் முழுவதும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உதவிய உறவினர் ஒருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

ஆண் நண்பர்கள் என்று நம்பி சென்றால் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கும் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

Previous articleபிரபல ரவுடி பேபி நடிகைக்கு விவாகரத்தான இயக்குனருடன் இரண்டாவது திருமணமா! இணையத்தில் உலா வரும் தகவல்!
Next article23 வயது இளையவருடன் திருமணம்! 200,000 பவுண்டுகளை ஏமாந்த பிரித்தானிய பெண்மணி! அம்பலமான சம்பவம்!