விபத்தில் காயமடைந்துள்ள குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
யாழ்.குருநகர், கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழந்து விட்டதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 05ஆம் திகதி ஏற்பட்ட குறித்த விபத்தின் போது மூவர் காயமடைந்திருந்தனர். இதில் காயமடைந்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்புத்துறை சுண்டிக்குளி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கணபதிப்பிள்ளை மகிந்தன் என போலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: