விநாயகர் சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?
தெய்வங்களில் முழுமுதற்கடவுள் விநாயகர். பண்டிகைகளிலும் தலையாயது விநாயகர் சதுர்த்தி.
விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
ஆவணி சதுர்த்தி அன்றுதான் விநாயகப்பெருமான் தோன்றினார் என்று புராணம் கூறுகின்றது.
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை முறையாக பூஜித்து வழிப்படுவது நற்பயன்களை வழங்குகின்றது. அந்தவகையில் தற்போது இவ்விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது என்பதை பார்ப்போம்.
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம்.
பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைத்து, அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலை வைக்க வேண்டும்.
இலையின் நுனி வடக்கு பார்த்தாற்போல இருக்க வேண்டும். இந்த இலையில் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
அன்றைய தினம் விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்வது சிறப்பு. அதனுடன் எள்ளுருண்டை, பாயசம், வடை உடன் நைவேத்யம் படைக்கலாம்.
மேலும் பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.
நன்மை
இந்த விரதத்தை கடைபிடிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்தும் மீண்டு வர முடியும் என்பது நம்பிக்கை.விநாயகர் சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?