இந்த தீபாவளி சர்கார் படத்துக்கான விழாவாக கொண்டாட தயாராகியுள்ளனர் விஜய் ரசிகர்கள். படத்தையும் சொன்ன தேதியில் வெளியிட படக்குழு தொடர்ந்து வேலை பார்த்து வருகின்றனர்.
அண்மையில் விஜய் டப்பிங் வேலைகளை முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. படத்தில் செய்தி வாசிப்பு காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம். அந்த காட்சிகள் சமீபத்தில் படமாக்க செய்தி வாசிப்பாளராக நடித்த அனிதா தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
விஜய் அவர்கள் என்னுடைய அனுவலகத்திற்கு வந்தார், நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு அவருடன் பேசினேன். ஒரே டேக்கில் நான் செய்தி வாசித்து முடித்தது பார்த்து முருகதாஸ் மற்றும் படக்குழு அசந்து போய்விட்டனர். இந்த நிகழ்வை மறக்க மாட்டேன் என பதிவு செய்துள்ளார்.